பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 04 3. (கெட்டார்க்கு நண்பர்கள் இல்லையோ?) கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சே நீ பெட்டாங்கு அவர்பின் செலல். [1293] நெஞ்சமே! நீ என்னிடம் இருந்துகொண்டிராமல், விருப்பப்பட்டபடியே அவரிடத்தில் (நாயகரிடத்தில்) செல் லுவதற்குக் காரணம், கெட்டுப்போனவர்கட்கு நண்பர் களாக இருப்பவர்கள் உலகில் இல்லை என்ற நினைப்புதானே? 4. (உன்னுடன் சேரமாட்டேன்.) இனி அன்ன நின்னெடு சூழ்வார்யார் நெஞ்சே துணிசெய்து துவ்வாய் காண் மற்று . [1294] மனமே! நீ அவரைக் கண்டபோது இன்பம் நுகர நினைக்கவில்லை. அவருடைய தவறு கண்டு பிணக்கினை உண் டாக்கி அதனை அளவறிந்து பின்பு அனுபவிக்க நினைக்கமாட் டாய்; இனிமேல் அப்படிப்பட்டவைகளை உன்னுடன் எண்ணிப் பார்ப்பவர்கள் யாரே உளர்? (தன்னுடைய நெஞ்சத்துடன் அவள் பேசுகிருள்.) 5. (நாயகி, தன் நெஞ்சினைப் பற்றிப் பேசியது.1 பெரு.அமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அரு.அ இடும்பைத்துஎன் நெஞ்சு. [1295] நாயகர் பிரிந்திருக்கும்போது அவரைப் பெறவில்லையே என்று நெஞ்சம் அஞ்சிக்கொண்டிருக்கும்; நாயகனைப் பெற்ற பிறகும் பிரிந்து சென்றுவிடுவாரோ என்று நினைத்து அஞ்சும்: ஆகையில்ை என்னுடைய மனமானது எப்போதும் நீங்காத துன்பமுடையதாக இருக்கின்றது. 6. (என்னைத் தின்பது போன்றது. தனியே யிருந்து நினைத்தக்கால் என்னைத் - தினிய இருந்தது என் நெஞ்சு. [1296]