பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10.5 என்னுடைய நெஞ்சமானது இங்கே இருந்துகொண் டிருக்கிறது. நாயகரைப் பிரிந்திருந்து தனியாக இருந்து கொண்டு அவருடைய கொடுமைகளை (பிரிவினல்) நினைக்கும் போது, அந்த நேரத்தில் என்னைத் தின்பது போல துன்பம் செய்வதாகின்றது. (தன்னுடைய நெஞ்சத்தினைப் பார்த்து நாயகி கூறியது.) 7. (நாணத்தையும் மறந்தேன்.) நானும் மறந்தேன் அவர்மறக் கல்லா என் மாளு மடநெஞ்சில் பட்டு. - [1297] தன்னே (நாயகியை) மறந்த நாயகரை மறக்கமுடியாத மாட்சி-பெருமையில்லாத என்னுடைய அறிவென்பதில் லாத மனத்துடன் கூடி, என்னுடைய உயிரினும் மேலான தான நாணத்தினையும் நான் மறந்துவிட்டேன். (நாயகி பேசிளுள்.) - 8. (நாயகரை ஏளனம் பேசுதல் கூடாது.) எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர் திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. I 1298] உயிரின் மீது ஆசையுள்ள என்னுடைய நெஞ்சமானது நம்மைப் பிரிந்து துன்பமுறும்படி செய்துவிட்டுப் போன நாயகரை நாமும் ஏளனமாகப் பேசினல் பிறகு அது நமக்கே ஏளனமாக முடியும் என்று எண்ணி அவருடைய பெருமை யினையும் திறத்தினையுமே நினைத்துக்கொண்டிருப்பதாகின் றிது . 9. (துன்பத்தினைப் பற்றி நாயகன் சொல்லியது.) துன்பத்திற்கு யாரே துணையாவார் தாம் உடைய நெஞ்சம் துணைஅல் வழி. * ... [12991