பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 ஒருவருக்குத் துன்பம் வந்தபோது தாம் உரிமையுடன் பெற்றிருக்கின்ற தமது மனம் துணையாக நின்று உதவா திருச்குமானல் துணையாக இருப்பவர்கள் வேறு யார் உண்டு? 10. (நெஞ்சமே நல்ல துணை.) தஞ்சம் தமர்அல்லர் ஏதிலார் தாம் உடைய நெஞ்சம் தமர்அல் வழி. தாம் உரித்தாகப் பெற்றிருக்கும் மனம் ஒருவர்க்கு உறவினராக இருந்து உதவாவிடத்து அன்னியர்கள் நம்ம வர்கள் அல்லாதவர்களாக இருத்தல் சொல்லவும் வேண் டுமோ? - (1300) 131. புலவி 1. (நாயகன் வந்தபோது தோழி நாயகியிடம் கூறியது.1 புல்லாது இரா.அப் புலத்தை அவர்உறும் அல்லல்நோய் காண்கம் சிறிது. [1301յ காதலர் அடைகின்ற காமத் துன்ப நோயினை சிறிது நாம் காண்போமாக; அவரை விரைந்து போய் தழுவாமல் இருந்து பிணங்கிக் கொண்டிருப்பாயாக; 2. (புலவியின் அளவு.) உப்பு:அமைந் தற்ருல் புலவி அதுசிறிது மிக்கற்ருல் நீள விடல். | 1302] பிணங்குதல் என்று சொல்லக்கூடிய புலவி புணர்ச்சிக்கு முன் நிகழ்வதாகும். அது, உணவுகளே இனிமையான சுவை யாவதற்கு உப்பு எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு புலவி இருத்தல் வேண்டும். அந்தப் புலவியை அளவிற்கு மேலாக சிறிது மிக விடுதல் உப்பு அளவிற்கு மீறி ப்ோட்ட போலாகும். -