பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 07 3. (நாயகனுடன் நாயகி புலந்து கூறியது.) அலந்தாரை அல்லல்நோய் செய்தற்ருல் தம்மைப் புலந்தாரை புல்லா விடல். [1303] ஆண்கள் தம்மைப் பெருமல் பிணங்கிக்கொண்டிருந்த மகளிரை அப்பிணக்கினே நீக்கி புணராமல் விட்டுவிடுதல் முன்னமேயே துன்புற்று அழிந்த நிலையிலிருப்பவர்க்கு மேலும் மிகுந்த துன்ப நோயினை உண்டாக்கியது போன்ற தாகும். 4. (வள்ளி. 1 ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந் தற்று, [1304յ ஊடல் செய்து பிணங்கிக்கொண்டிருக்கின்ற மகளிரை அப்பிணக்கு நீக்கி கூடாதிருப்பது முன்னமேயே தண்ணிரில் லாமல் வாடிக்கொண்டிருக்கின்ற கொடியை அடியிலே அறுத்தது போன்றதாகும். (வள்ளி-கொடி) 5. (புலவி நீக்கிக் கூடிய நாயகன் கூறியது.) நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூவன்ன கண்ணுர் அகத்து. [1305] நற்குணங்களினலே தகுதியும் பொருத்தமும் நிறைந்த காதலர்க்கு அழகாவது என்னவென்றல், மலர் போலும் கண்களையுடைய காதலியார் நெஞ்சில் உண்டாவதாகின்ற பிணக்கின் மிகுதியல்லவா? 6. (கனியும் கருக்காயும்.1 துணியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று. [130 6յ பெரிதான பிணக்கும், சிறியதான பிணக்கும் (துணியும் புலவியும்) இல்லாமலிருந்துவிட்டால் காம இன்பமானது