பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 முதிர்ச்சி அதிகப்பட்ட பழமும் இளங்காயும் போல் இருப்ப தாகும் . - 7. ஊடலில் உண்டாகும் துன்பம்.) ஊடலின் உண்டு.ஆங்கு ஓர் துன்பம் புணர்வது நீடுவது அன்றுகொல் என்று. புணர்ச்சியானது நீட்டித்திருக்குமோ அல்லது நீட்டி யாது இருக்குமோ என்ற எண்ணம் உண்டாவதால் இன்பத் திற்கு இன்றியமையாததான பிணக்கிலேயும் ஒரு துன்பம் உண்டாவதாகின்றது. [1307] 8. (காதலர் அறிதல் வேண்டும்.) நோதல் எவன் மற்று நொந்தார்என்று அஃது அறியும் காதலர் இல்லா வழி. [1308] இவர் (காதலர்) நம்மால் வேதனைப்பட்டிருக்கின்ரு ரென்று அந்தக் காம் நோயினை அறிந்துகொள்ளுகின்ற காத லரைப் பெற்றிருக்காதபோது, ஒருவர் நொந்துகொள்ளு வதனால் உண்டாகின்ற பயன் யாது? 9. (நீரும் நிழலும்.1 நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது. I 1309] உயிர் வாழ்தற்கு இன்றியமையாத நீரும் நிழலில் உள்ளபோது இனிதாகும். அதுவே போல, புணர்ச்சி யின் பத்திற்கு இன்றியமையாததான பிணக்கும் அன்பு நிறைந்த காதலர்களிடையேதான் இனிதாக இருக்கும். 10. (ஊடலை உணங்க விடுதல்.) ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா. - [1310]