பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109 தான் பிணங்கிக்கொண்டு வருத்தமுற்றிருக்கவும், தன்னை விட்டிருக்கும் காதலருடனே என்னுடைய மனம் கூடி இன் புறுவோம் என்று முயற்சி செய்வதற்குக் காரணம் ஆசையே யாகும். 132. புலவி நூனுக்கம் 1. (நாயகனும் நாயகியும் ஓர் அமளிக்கண் இருந்தபோது நாயகி சொன்னது.1 பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. [1311] பரத்தையரிடத்து நட்புகொண்டவரே பெண் தன்மை யுடையவர்கள் எல்லோரும் தங்களுடைய கண்களால் பார்த்து பொதுவாக உங்களை அனுபவித்து இன்புறுவார் கள்; ஆதலால் அவர்கள் அனுபவித்த உங்கள் மார்பினை நான் பொருந்தமாட்டேன். - 2. lதும்மல்-தலைமகள் கூறியது.1 ஊடி இருந்தேமாத் தும்மினர் யாம் தம்மை நீடுவாழ் கென்பாக்கு அறிந்து. [1312] காதலர் தம்முடன் ஊடல் செய்துகொண்டு பேசாது இருந்தேன். (நாயகி), அப்போது காதலர் தும்மினர். அப்படித் தும்மியதற்குக் காரணம், யாம் பிணக்கு நீங்கி, அவரை நெடுங்காலம் வாழ்க’ என்று சொல்லிப் பேசுவோம் என்பதாகக் கருதி: தும்மினல் வாழ்த்துவது மரபு. 3. (நாயகி புலந்துகொள்ளுவது.) கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினிர் என்று. [13131