பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I G வளைவாகவுள்ள பூமாலையைச் சூடினேனுயினும், நீங்கள் காதலித்துள்ள ஒருத்திக்குக் காட்டுவதற்காகவே இப்பூமாலை யைச் சூடிக்கொண்டிருக்கிறீர் என்று கோபித்துக்கொள்ளு வாள். 4. (காதல் சிறப்பினைக் கூறியபோதும் கோபித்தாள்.) யாரினும் காதலம் என்றேணு ஊடினுள் யாரினும் யாரினும் என்று. காதலர்களாக உள்ள யாரினும் மிகுந்த காதலை உடை யேம் என்று சொன்னேன். உங்களால் விரும்பப்பட்ட பல மகளிருள்ளும் என்னைச் சிறப்பாகக் கூறுகிறீர்களோ-ஒப் பிட்டு-என்று சொல்லி ஊடிக்கொண்டாள். "யாரினும் காதலம்’ என்று கூறியதில் குறைகண்டு ஊடினள். [1314] 5. (இப்பிறவியில் பிரியேன்.) இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனுக் கண் நிறை நீர்கொண் டனள். [1315] காதன் மிகுதியால் காதலியை நோக்கி இப்பிறவியிலே நின்னைப் பிரியேன்” என்று கூறினேன். அப்படியென்ருல் மறுபிறவியிலே பிரிந்துவிடுவீர்களோ என்பதாகக் கருதி அழுது கண்ணிறைந்த நீரைக்கொண்டாள். 6. (நினைத்தேன் என்ருன், கோபித்தாள்.) உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றுஎன்னைப் புல்லாள் புலத்தக் கனள். I 1316] பிரிந்திருந்தபோது, உன்னையே இடைவிடாமல் நினைத் திருந்தேன்’ என்று கூறினேன். (மகிழ்வாள் என்று நாயகன் நினைத்தான் ) அதற்குமாருக, அக்காதலி மறந்திருந்தால் தானே நினைக்க வேண்டி வரும் என்று கூறி-ஏன் மறந் திருந்தீர்-என்ற நினைப்பில், என்னைத் தழுவாமல், தழுவ வந்தவள்-பிணங்குதற்கு அமைந்தாள்.