பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 13 கொள்ளுவது போல, நமக்கு இன்பத்தினைத் தருவது-தரு கின்ற, ஒரு தெய்வலோகம் உண்டோ? இல்லை யென்பதாம். 4. (புலவி நீங்கும் வழி.) புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும் என் உள்ளம் உடைக்கும் படை, [1324յ - காதலரைத் தழுவிக்கொண்டு பிறகு விடாமல் இருப்ப தற்குக் காரணமான அப்பிணக்கினுள்ளே என்னுடைய உள்ளத்தினை உடைக்கின்ற படை உளதாகின்றது. 5. (தலைமகன் தன்னுள்ளே கூறியது.) தவறு இலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து. [1325] - ஆண்கள் தங்களிடத்தில் குற்றங்கள் இல்லாதவர்களா யிருந்தாலும், இருப்பது போல நினைத்துப் பிணங்கிக்கொண் டிருக்கும் தம் விருப்பத்திற்குரிய மகளிரது மெல்லிய தோள் களேக்கூடி இன்பமுருத நேரத்தில், அவர்க்கு அத்தன்மைய தானதோர் இன்பம் உடையதாகின்றது. 6 . (உண்ணலும் புணர்தலும்.) உணலினும் உண்டது அறல்இனிது காமம் புணர்தலின் ஊடல் இனிது. [1326յ உணவு உண்ணுகிறபோது பெறுகின்ற இன்பத்தினை விட முன்பு உண்ணப்பட்ட உணவு சீரணித்தல்தான் இன்பம் தருவதாகும். அதுவே போல, காமத்திற்குப் புணர்தலின விட ஊடல் என்கின்ற பிணங்கிக்கொண்டிருத்தல் இன்பம் தருவதாகும். * - 7. (தோல்வியும் வெற்றியும்.) ஊடலின் தோற்றவர் வென்றர் அது மன்னும் கூடலின் காணப் படும், [1327] தி-8