பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் முறையே அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பிரிவுகளை உடையது. இவை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்று வழங்கப்படுகிறது. மூன்ருவது பகுதியாகிய காமத்துப் பாவின் சுருக்கம் காண்போம். இது, களவியல், கற்பியல் என இரண்டு இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, பிறர் அறியாமல் (களவு) மறைவாக நடைபெறுவதைக் கூறுவது களவியல். ஆடவனும் பெண் னும் இயற்கையமைப்பால் எதிர்பாராதபடி ஒருவரை யொருவர் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகின்றது. இயற்கையமைப்பால் எதிர்பாராதபடி அப்பெண்ணின் அழகில் முதலில் உள்ளத்தைப் பறிகொடுத்து மலைத்து நின்று ஆடவன் பேசுகின்ருன். அவளுடைய உறுப்புக்களின் அழகு, தோற்றம் பற்றியெல்லாம் கூறுகின்ருன். பிறகு அவளும் அவனைப் பார்க்கின்ருள். இருவரு டைய பார்வைகளும் தொடக்கத்திலிருந்து பலவகைகளாக அமைகின்றன. நோக்குகள் வளர்ந்து ஒருவர் உள்ளக் குறிப்பினை ஒருவர் புரிந்துகொள்ளுகின்றனர். மனம் ஒன்றுபட்டு விடுகின்றனர். காதலர் ஆயினர். இன்பம் நுகர்ந்தனர்: இன்ப மகிழ்ச்சியில் ஒருவரை யொருவர் பாராட்டிப் பேசிக் கொள்கின்றனர். இனிச் சந்திப்பில்லாமல் நாம் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இப்படியிருந்து வருகையில், பெண்ணின் பெற்ருேர் சுாதல் ஒழுக்கத்தைத் தெரிந்துகொண்டனர், பெண்ணுக்குத் தடைபோட்டுவிட்டனர். காதலி காதலனைச் சந்திக்க முடியாமல் வேதனைப்படுகின்ருள். காதலனும் அப்படியே வருந்துகின்ருன்.