பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 14 இன்பம் நுகர்வதற்குரிய இருவரில் ஊடல் என்கின்ற பிணக்கிலே தோற்றவர் வெற்றி பெற்றவராவர். அது அந்த நேரத்தில் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பின்ணே புணர்ச்சியிலே அறிந்துகொள்ளப்படும் என்பதாகும். 8. (துதலும் உப்பும்) ஊடிப் பெறுகுவம் கொல்லோ துதல்வெயர்ப்பக் கூடலின் தோன்றிய உப்பு. [1328] இப்பெண்ணின் நெற்றியில் வெயர்வை வரும் வகையில் புணர்ச்சியின் கண்ணே உள்ளதாகிய இன்பத்தினை இன்னும் ஒரு வாய்ப்பில் இவள் பிணங்கி யாம் பெறுதல் கூடுமோ? 9. (இரவுப்பொழுது நீளுவதாகுக.) ஊடுக மன்னே ஒளி இழை யாம் இரப்ப - . நீடுக மன்குே இரா. [1329] ஒளி வீசும் அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம் முடன் இன்னும் பிணங்கிக்கொண்டிருப்பாளாக; அப்பிணக் கினைத் தீர்க்கும் பொருட்டு யாம் அவளிடம் வேண்டிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்த இரவு விடியாமல் நீட்டித்துக்கொண்டிருப்பதாகுக. 10. (இன்பம்-இன்பம்.1 ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் கூடி முயங்கப் பெறின். - [I330] காம அனுபவம் என்பதற்கு இன்பம் எதுவென்றல் ஊடுதல் எனப்படுகின்ற பிணங்குதலாகும். அந்த ஊடுத லுக்கு இன்பமாவது எதுவென்ருல் இருவரும் கூடி புணர்தல் நிகழுமானல், என்பதாம். (காமத்துப்பால் இருநூற்று ஐம்பது குறட்பாக்களும் நிறைவுற்றன .) - .