பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் அதிகாரங்கள் விளக்கம் இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்ட காமத்துப் பாலில் முதல் அதிகாரம் தகையணங்குறுத்தல் என்ற பெயரில் அமைந்திருக்கிறது. அதாவது அப்பெண்ணின் அழகு தன்னை வருத்துகின்றது என்று காதலன் சொல்லுகின் ருன் என்பதாகும். காதல் என்பது பெண்ணின் அழகினைக் கொண்டுதான் தொடங்கப்படுகின்றது என்பதற்காகத்தான் முதல் அதிகாரத்தின் பெயரிலேயே அணங்கு’ என்ற சொல் லினே அமைத்தார். அணங்கு என்பது அழகு நிறைந்த பெண்ணைக் குறிக் கின்றது. அணங்கு என்பது தெய்வமகள் என்பதைக் குறிப்ப தாகும். காமத்துப்பாலின் முதல் குறட்பா அணங்கு என்ற சொல்லினுல்தான் தொடங்குகின்றது என்பதும் சிந்திக்கத் தக்கதாகும். - அடுத்து காதலர்கள் ஒருவரையொருவர் பார்வைகளி ல்ை பார்த்து மகிழ்வதனைக் குறிப்பதாகும். இந்த அதிகாரத் திற்குக் குறிப்பறிதல் என்ற பெயர் வைக்கப்பட்டு இருக் கிறது. உள்ளத்தில் உள்ள எண்ணங்களை முகக்குறிப்புகளி ல்ை தலைமகனும் தலைமகளும் அறிந்துகொள்ளுதல் ஆகும். பொருட்பாலில் குறிப்பு அறிதல்’ என்ற பெயரில் ஒரு அதிகாரம் வைக்கப்பட்டுள்ளது. திருக்குறளில் இந்த ஒரு அதிகாரத்தின் பெயர்தான் இரண்டு முறை சொல்லப்பட்டு இருக்கின்றது. ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கின்ற தலைவன் அதாவது மன்னன் சிறந்த பேரறிஞர்களைத் தனக்குத் துணையாக வைத்துக்கொள்ளு வான். - தலைவனைப் பார்க்க வருகின்றவர்களுடைய முகக்குறிப் பினக்கொண்டே வருகின்றவர்களின் உள்ளத்தில் எத்