பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அலரறிவுறுத்தல் என்பது காமத்துப்பால்-களவியல் பகுதியில் கடைசி அதிகாரம் ஆகும். பிறர் அறியாமல் மறைவாக நடந்துவந்த காதல் பிறர் அறிந்துகொள்ளும் நிலையை ஏற்படுத் திவிட்டது என்பதைச் சொல்வதாகும். பெற்ருேர்கள் அறியாமல் இருவரும் வெளியூர் செல்வதற்கு உரிய எண்ணங்களையும் உண்டாக்கச் செய்வதாகும். காமத்துப்பாவில் இரண்டாம் பிரிவான இந்த கற்பிய வில் முதல் அதிகாரமாக பிரிவாற்ருமை வைக்கப்பட்டுள் ளது. நாயகன் பற்பல பணிகள் காரணமாக நாயகியைப் பிரிந்து செல்கின்ருன். அவள் பிரிவுத் துன்பத்தினைத் தாங்கிக்கொள்ள முடியாமல் துன்பப்படுகின் ருள். பிரிவுத் துன்பத்தினைத் தாங்க முடியாததால் பிரிவாற் ருமை என்று வைக்கப்பட்டது. ஒரு பெண்ணுனவள் தன் னுடைய கற்பின் மேம்பாட்டினை நாயகன் பிரிந்திருக்கும் பொழுதுதான் உணர்த்தமுடியும் என்ற குறிப்பினை உணர்த் துவான் வேண்டியே கற்பு இயவில் பிரிவாற்ருமை முதல் அதிகாரமாக வைக்கப்பட்டது. அடுத்த அதிகாரம் படர் மெலிந்திரங்கல். நாயகன் பிரிந்துவிட்டதினால் உடம்பு மெலிந்த வருத்தத்தினைக் குறிப்பதாகும். - அடுத்த அதிகாரம் கண் விதுப்பழிதல். விதுப்பு தன்மையினைக் குறிப்பதாகும். கண்கள் நாயகனைக் காண விரைந்து வருந்துகின்றன என்பதாகும். அடுத்த அதிகாரம் பசப்புறு பருவரல், நாயகன் பிரிவி ல்ை நாயகியின் உடம்பு வேறு நிறமாக வெளுத்து பசலை பூத்துவிடுகிறது. அதனல் நாயகி வருந்துகின் ருள் என்பதை இந்த அதிகாரம் குறிக்கிறது. அடுத்த அதிகாரம் தனிப்படர் மிகுதி. தனிமையாக அவள் இருப்பதால் பிரிவுத்துன்பம் அவளுக்கு வந்துவிட்ட து. அந்தத் துன்பம் மிகுதியாக இருக்கிறது. அறமும் பொருளும்