பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2 I நோக்கி ஆண்மகன் பிரிந்து இருப்பதால் அவனுக்கு இந்தத் துன்பம் இல்லை என்பதாகும். நாயகனேடு இன்புற்று வாழ்ந்த நாட்களை நினைத்து. நாயகி வருந்துவதைக் கூறுகிறது நினைத்தவர் புலம்பல் என்ற அதிகாரம். இந்த அதிகாரம் சிறப்பாக நாயகிக்குத் தான் என்று கூறுவதும் உண்டு. இல்லத்தில் தலைவி பற்பல கனவுகள் காண்கிருள். அந்தக் கனவுகளோடு கண்ட நாயகனைப் பற்றியும் நிகழ்ச்சி கள் பற்றியும் கூறுவது கனவு நிலை உரைத்தல் என்ற அதிகாரம் ஆகும். - மாலைநேரம் வந்த உடனே இன்ப எண்ணங்கள் எல்லாம் நாயகிக்கு வந்துவிடுகின்றன. அந்த மாலைநேரம் வந்ததைக் கண்ட உடனே நாயகி வருந்துவதைப் பொழுது கண்டு இரங்கல் என்ற அதிகாரம் கூறுகின்றது. இன்ப எண்ணங்களையும் நாயகனையும் நினைத்து நினைத்து நாயகியின் உறுப்புகளின் அழகு எல்லாம் அழிந்து போவதை உற்றுப்புநலன் அழிதல் என்ற அதிகாரம் கூறுகின்றது. துன்பம் மிகுதியால் பெண்கள் தமக்குத்தாமே நொந்து கொண்டு பேசுவார்கள். தனக்கு ஆறுதல் சொல்லுவதற்கு யாருமே இல்லாததால் நாயகி இன்னது செய்வது என்று அறியாமல் தன்னுடைய நெஞ்சத்தோடு தான் பேசுவதை நெஞ்சொடு கிளத்தல் என்ற அதிகாரம் விளக்கம் செய் கின்றது. - கற்பு நிறைந்த பெண்கள் தங்கள் உள்ளத்தில் உள்ள இன்ப எண்ணங்களை எப்போதும் மறைத்தே வைத்திருப் பார்கள். காம மிகுதியினல் அடக்க முடியாமல் வாய்விட்டு வெளிப்படுத்தி விடுகின்ற செய்திகளை எல்லாம் நிறை யழிதல் என்ற அதிகாரம் விளக்கமாகக் கூறுகின்றது. பிரிவுத் துன்பத்தினல் வாட்டமுற்று இருக்கும் நாயக னும் நாயகியும் ஒருவரை ஒருவர் காண்பதற்கு விரைந்து