பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 22 கொண்டு இருக்கிரு.ர்கள் என்பதை அவர்வயின் விதும்பல் என்ற அதிகாரம் கூறுகின்றது. உள்ளத்தில் உள்ள குறிப்புகளை ஒருவருக்கொருவர் மற்றவர் உணருமாறு வெளிப்படுத்திக்கொள்வதைக் குறிப் பறிவுறுத்தல் என்ற அதிகாரம் சொல்லுகின்றது. பிரிந்து இருந்த நாயகனும் நாயகியும் இன்பம் நுகரு தற்கு விரைந்து இருப்பதைப் புணர்ச்சி விதும்பல் என்ற அதிகாரம் கூறுகின்றது. - பிணங்கிக் கொள்ளுதல் என்பது ஊடல் ஆகும். நாயக னுடன் ஊடல் செய்ய வேண்டும் என்ற அவள் எண்ணத் திலுைம் அவள் நெஞ்சம் ஊடலுக்கு இடம் தராமல் கூடலுக்கு விரைந்து செல்லுகிறபடியால் இந்த நெஞ் சுடனே அவள் பேசுவதை நெஞ்சொடு புலத்தல் என்ற அதிகாரம் சொல்கிறது. சிறு பிணக்கு என்கிற கருத்தினைப் புலவி என்கின்ற சொல் விளக்கம் செய்கின்றது. புலவி என்பது தலைவிக்கு இன்றியமையாததாகும். நாயகனேடு நாயகி சிறு பிணக்கு செய்வதைப் புலவி என்ற அதிகாரம் தெளிவாக எடுத் துரைக்கின்றது. - நாயகனிடம் பிணங்குவதற்கு எந்தக் காரணமும் இல்லை யாயினும், காதல் மனத்தால் நுணுக்கமான காரணம் ஒன்றை உள்ளதாகக் கற்பனையால் கண்டுபிடித்து அவன்மீது நாயகி பிணங்கிக்கொள்வது ஆகும். இதற்குப் புலவி நுணுக்கம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. காமத்துப்பாலில் கடைசியாக உள்ள அதிகாரம் ஊடல் உவகை என்பதாகும். அதாவது கூடலுக்கு இன்றியமை யாத ஊடல், இன்பத்திற்கு முதல் காரணமாக இருப்ப தால் நாயகனும் நாயகியும் ஊடலின் சிறப்பினை உணர்ந்து மகிழ்ந்து இருப்பதாகும். . . . . .