பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

x


காதலியைச் சந்திக்க முடியாத காதலன் முன்னர் துகர்ந்த இன்பத்தினைப் பெற முடியாதவனாகி அல்லல் பட்டு உயிரையும் இழக்க முற்பட்டுவிடுகின்ருன். தனது நாணத்தினையும் வீரத்தினையும் விட்டு, தான் அடைகின்ற துன்பத்தை ஊரார் அறியச் செய்ய எண்ணுகின்ருன். ஊரார் அறியுமாறு செய்கின்ற பழக்கத்தை மடன் மா ஊர்தல்' என்று கூறுவார்கள். பனை ஒலையில் ஒரு மிருகம் போன்று செய்து அதன் மீது ஏறி ஊர் மக்கள் வெளிப்படையாகப் பார்க்குமாறு செல்வார்கள். இது ஒரு பழக்கம். காதலன் படுகின்ற அவல நிலையையும் தன்னுடைய காதலுக்குத் தடைபோட்டு இருப்பதையும் இச்செயல் வெளிப்படுத்தும், காதலன் மடன் மா? ஊர்தலைக் கண்ணுற்ற ஊரார், அவர்கள் இருவ ருக்கும் உண்டான காதலை அறிந்து பலவிதமாகத் துாற்றிப் பேசுகின்றனர். இவ்வாறிருக்க, தோழியின் துணையால் காதலர் இருவ ரும் ஒருமனப்பட்டுப் பெற்ருேர்கள் அறியாதவாறு வெளி யூர் சென்றுவிட முனைகின்றனர். இவர்கள் உள்ளத்தை நன்கு புரிந்துகொண்ட பெற்ருேர் திருமணம் செய்து வைக் கின்றனர். களவியல் பகுதி இத்துடன் முடிந்தது. அடுத்தது 'கற்பு இயல்’ என்பதாகும். களவியல் பகுதியைவிட இப்பகுதி இருமடங்கு அதிகமான கருத்துக் களைக் கூறுவது எனலாம். இல்லறம் நடத்தும்போது நிகழ் வது கற்பியல், பெரும்பாலும் கற்பு நிறைந்த நாயகியின் குணங்களையும், உணர்ச்சிகளையும், தன்மைகளையும் எடுத்துக் காட்டுவதால் இப்பகுதி கற்பியல் எனப்பட்டது. ஒவ்வொரு கருத்தினை விளக்குவதற்கும் ஒவ்வொரு அதிகாரம் கூறுகின்ற ஆசிரியர் - அன்புடைமை-அடக்க முடைமை-பண்புடைமை என்பன போன்று கற்புடைமை' என்று ஒரு அதிகாரம் அமைத்துக் கூருமல் கற்பியல்’ என்ற பெயரில் ஒரு பகுதியே அமைத்துப் பதினெட்டு அதிகாரங்