பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi


களில் விளக்கம் செய்திருப்பது பன்முறையும் கற்பின் பெருஞ்சிறப்பினைச் சிந்திக்கவைப்பதாகும். இல்லறம் நடத்தி வாழ்ந்துகொண்டிருக்கும்போது, நாயகன் நாயகியைவிட்டுப் பிரிந்திருக்க நேருகிறது. ஒரு நாயகியின் கற்பின் திறம், நாயகன் பிரிந்திருக்கும்போது தான் அறியப்படும். இது ஆசிரியர் காட்டும் குறிப்பு ஆத லால்தான், கற்பியல் பகுதி பிரிவு ஆற்ருமை' என்ற அதிகாரத்தை முதலாவதாகக் கொண்டிருக்கிறது. பொருள் தேடல். போர்க்குச் செல்லுதல் என்பன போன்று நாயகன் பிரிந்து செல்லுவதற்குப் பல காரணங்கள் உண்டு. தலைவன் பிரிந்து செல்ல இருக்கின்ருன் என்பதனை அவன் முந்திய இரவில் தன்னுடன் இன்பம் நுகர்ந்த தன்மை யிலிருந்தே ஒருவாறு தலைவி புரிந்துகொண்டாள். அவள், அவன் பிரிந்து செல்வதைத் தடுக்க முடியவில்லை. பிரிவுக் கும் உடன்பட்டாள். அவன் பிரிந்து சென்ருன். அவன் மேற்கொண்டு செய்யவேண்டிய பணி அவ்வளவு இன்றி யமையாததாகும். தலைவன் பிரிந்தவுடனே தலைவியின் வேதனை தொடங்கி விடுகின்றது. அவளுடைய வேதனை பல முறைகளில் வெளிப் படுகின்றது. அவ்வப்போது தோழி சிறிது துணையாக இருந்துவருகின்ருள். பிரிவை நினைக்க நினைக்க தலைவியின் வருத்தம் அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் துன்பம் மிகுந்தது. உடம்பு மெலிவ டைந்தது. நாயகனைக் காண அவள் கண்கள் துடிக்கின் றன. கண்கள் படுகின்ற துன்பத்தையெல்லாம் கூறுகின் ருள். இப்படியிருக்க அவள் உடல் மெலிந்தது மட்டுமல்லா மல், மேனி முழுவதும் பசலை நிறம் வந்துவிட்டது. இன்பம் இல்லாமல் துயருறுவதை இந்த நிறம் உணர்த்துவதாகும். அழகும் குறைந்துவிட்டது. தனியாக இருக்கும் அவள், தனிமையில் உண்டாகின்ற எண்ணங்கள் தன்னைத் தின்கின்றன என்று கூறுகின்ருள். காம இன்ப வேகம் தாங்க முடியாதவளாகித் தவிக்கின்