பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமத்துப்பால் அணிகளின் சிறப்பும் பயனும் செய்யுட்களில் கருத்துச் சுவையினைச் சிறப்பித்துக் காட்டுவது அணிகளாகும். அணி என்ற சொல்லுக்கே அழகு என்பது பொருளாகும். இலக்கிய உலகில் அணி இலக்கணத் திற்குத் தனிப் பெருமை உண்டு. ஆசிரியர் திருவள்ளுவனர் அருமையான இடங்களில் சிறப்பாக அணிகளை அமைத்துக் குறட்பாக்களுக்குப் பெருமை தருகின்றர். திருக்குறளில் முதல் குறட்பாவான 'அகர முதல எழுத் தெல்லாம் என்பதே சிறந்த அணியினைக் கொண்டிருப்ப தாகும். இது எடுத்துக்காட்டு உவமை அணி என்று சொல்லப்படும். திருக்குறளின் தொடக்கமே அழகுடன் தொடங்குகிறது என்பது குறிப்பாகும். . அணி இலக்கணத்தின் சிறப்பினைப் புலப்படுத்துகின்ற காமத்துப்பால் குறட்பாக்களில் சிலவற்றை கீழே தந்துள் ளோம்: . - - - r பெருமையாகப் பேசப்படும் அணிகளில் உவமை அணி’ என்பது போற்றற்குரியதாகும். சொல்லப்படுகின்ற உதார ணத்தினையும், (உவமையினையும்) பொருளினையும், நன்கு கூறி அவைகளுக்கு இடையே உருபு வருமாறு அமைத்தல் உவமை அணியாகும். உருபுகள் என்று இலக்கண முறையில் பல உண்டு. % . . உவமை உருபு என்று சொல்லப்படுபவைகளை மறை வாக வைத்து, தனித்தனியாக உவமையும் பொருளும் கூறப் படுவது எடுத்துக்காட்டு உவமை அணி என்று சொல்லப் படும். இதுவேபோன்று தனித்தனியாக அணிகளின் விளக்கங் களைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்.