பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五 95 உவமை என்பதினைப் பொருளின் மேல் வைத்து கருத்தி னைக் கூறுதல் உருவக அணி என்று சொல்லப்படுகிறது. "முறிமேனி முத்தம் முறுவல்’ என்பது போன்ற குறட்பாக் கள் உருவக அணி'யாகும். சொல்லப்படுகின்ற கருத்துக்களில்-பொருட்களில்ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்ருென்றை உருவகம் செய்யாமல் விட்டுவிட்டால் அது ஏகதேச உருவகம் அணி” என்று கூறப்படும். சொல்லவேண்டிய பொருளை நேராகக் கூறி வைக்காமல் உவமையைச் சொல்லிப் புரிந்துகொள்ளும்படி செய்வதற்குப் பிறிது மொழிதல் அணி’ என்று சொல்லுவார்கள். இவ்வாறே அணியிலக்கணத்தின் பற்பல சிறப்புக்களை எல்லாம் நன்கு தெரிந்துகொள்ளுதல் நல்லதாகும். ஆசிரியர் திருவள்ளுவளுர் அணிகளின் அழகினைத் தம் முடைய குறட்பாக்களில் மிக அழகாக அமைத்துவைத்திருப் பதைக் கண்டு மகிழ்வோமாக! அணிகளின் சிறப்பும் குறட்பாக்களும் காதலர்களின் பொது நோக்கு ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள 109.9 மகளிர் காமம் கடல் போன்றது கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏருப் பெண்ணிற் பெருந்தக்கது இல் 1137 காமமும் ஊற்று நீரும் மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் 116 I