பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் நால் அமைப்புக் குறிப்பு உலகிற்குப் பொதுமறை அளிக்க வந்த ஆசிரியர் திரு வள்ளுவளுர் உலகியல் நடைமுறைகளே மனதிற்கொண்டும், முன்னேர் மொழிந்த கருத்துக்களேத் தழுவியும், கொள்ள வேண்டியவைகளைத் தெளிவுபடுத்தியும், தமது நூலினே எழுதியுள்ளார் என்பது அறிந்துணர வேண்டியதாகும். எழுத்து. கல்வி, தாயஅறிவு இவைகளைத் தொடக்கத்தி லேயே எடுத்துக் காட்டி இறைவனுக்கு விளக்கமும் வழி பாடும் கூறுகின்ருர். இறைவன் உலகிற்கு முதன்மை யானவன் என்ற முறையில் அமைத்துக் கூரு; மல், உலகம் ஒருவனே முதலாவதாக உடையது என்று அமைத்துள்ளார். உலகின் மேல் வைத்துக் கூறியது மிகவும் சிந்தித்து அறிய வேண்டியதாகும். வான் சிறப்பு’ என்ற அதிகாரத்தில் உண்ரும் தன்மை யினை உடையது- உணரற்பாற்று' என்று குறிப்பிட்டுள் ளார். மழையில்லாவிட்டால், விழாக்களும், பூசையும் நடத்தமுடியாது என்று எடுத்துக்காட்டி, செல்லாது என்று சொல்லிய சொல் உலகில் வழங்கும் முறையினைக் குறிப்ப தாகும். நீத்தார் பெருமை என்ற அதிகாரத்தில் " . ஆவல் துணிபு' என்று கூறுகின்ருர். பல நூல்களில் கண்ட (քւգ-aյ இதுவே யாகும் என்று முன்னேர் கருத்துக்களைத் தழுவியே கூறுகின்ருர், நீத்தார்-முனிவர்-பெருமையின்க் குறிக்கும் போது மறைமொழி காட்டிவிடும் என்று விளக்குகின்ருர், உலகியல் உண்மையினைக் கண்டறிதல்' என்று கூறப்படும் முறையும் இதுவேயாகும்.