பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 இயல்பின்ை இல்வாழ்க்கை வாழ்பவன்' என்று இல் வத்தானக் குறிப்பிடும்போது இல்வாழ்க்கைக்குரிய இயல் புடனே என்று அமைக்கின்ருர். வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்’ என்று கூறப்படுவது, உலகியலில் வாழ வேண்டிய முறையுடனே’ என்பதைப் புலப்படுத்தி நடை முறையான தன்மையினைக் குறித்ததாகும். மங்கலம் என்ப. நன்கலம் நன்மக்கள்’ என்று, வாழ்க்கைத் துணை நலம்’ என்ற அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள முறை உலகில் அறிவு நிறைந்தவர்கள் கூறுவார்கள்’ என்று ஆசிரியர் குறிப்பிடும் தன்மையினே எடுத்துக் காட்டுகிறது. உலகில் அறிந்தோர் கூறுவதைக் கேட்டும், அறிந்தும், நூல்களைக் கற்றும் விளக்சம் தருகின்ற முறையில், யாம் அறிவதில்லை’ என்று மக்கட்பேறு’ என்ற அதிகாரத்தில் கூறு கின்ருர், யாம் மதிப்பது இல்லை என்ற பொருள்பட அமைக்கப்பட்டதாகும். இது ஒரு எடுத்துக்காட்டு. அறிந் தோர் சொல்லுவர்"- என்று கூறவேண்டி, என்ப' என்றும் 'அறுபத்து மூன்ரும் குறட்பாவில் குறிக்கின்ருர். இது போன்று பல உள தான் மட்டும் கண்ட உண்மையென்று கூருமல், உலகியல் அறிஞர்களின் கருத்துமாகும் என்று ஆசிரியர் ஆங்காங்கே குறிப்பிடுவது நூலில் கூறப்பட்டவை கள் முடிந்த முடிபாகக் கொள்ளப்பட வேண்டியவைகள் என்பதை வலியுறுத்துகின்றது. என்று சொல்லுவர் அறிந்தோர்’ என்கிற பொருளி லேயே, எழுபத்து மூன்ரும் குறட்பாவும் அமைக்கப்பட் டுள்ளது. எழுபத்தைந்தாம் குறட்பாவும் அவ்வாறே அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப் பலப் பல; உயர்ந்தோர் கருதமாட்டார்கள்”, என்ற பொருளில் வையாது உலகம்’ என்று நூற்றுப் பதினேழாம் குறட்பா காட்டுகிறது. தன் னுடைய கருத்து-என்று மட்டும் முடிவாக அனைத்தையும் கூறிவிடாமல், உலகில் உயர்த்தோர்-அறிஞர்-கருத்துக் களையும் எடுத்துக் காட்டும் பண்பு ஆசிரியரின் சிறந்த முறை களில் ஒன்று என்பதை வெளிப்படுத்துவதாகும்.