பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 "பலவற்றை ஆராய்ந்து பார்த்தாலும் இதுவேதான் துணை’ என்னும் பொருளில், நூற்று முப்பத்திரெண்டாம்' குறட்பா, தெரிந்து ஒம்பித் தேரினும் அஃதே துணை’ என்று குறிக்கின்றது. ஆசிரியர் தாம் நன்கு ஆராய்ந்தறிந்தே முடிவு சொல்லுகின்ருர் என்ற பேருண்மை சிந்தனைக்கு உரியதாகும். "நூற்று நாற்பதாம் குறட்பா மிகவும் சிந்திக்கத் தக்க தாகும், உலகத்தோடு பொருந்த நடந்து கொள்ளுவதை அறிந்துகொள்ளாதவர்கள், பல நூல்களையும் கற்ருராயினும், அறிவில்லாதவர்களே யாவார்கள். உலகியல் வாழ்வு-நன்னெறியில் வாழும் வாழ்க்கை-வற்புறுத்தப்பட்டது. உலகில் அறிவுடைய பெரியோர்களின் கருத்தினை எடுத் துக் காட்டி, வையாரே-வைப்பர்’ என்று நூற்று ஐம்பத் தைந்தாம் குறட்பா கூறுகின்றது. உலகில் ஆராய்ந்து பார்த்து அறிந்து கொள்ள வேண்டும்”, என்று நூற்று அறுபத்தொன்பதாம் பாடல் குறிக்கின்றது. நினைக்கப் படும்’ என்பது நூற்று அறுபத்தொன்பதாம் குறட்பாவில் காணப்படுகிறது. இருநூற்று மூன்ரும் குறட்பாவில், ஆசிரியர் என்ப' என்று குறித்து, நல்லோர் சொல்லுவர்என்று குறிப்பிடுகிருர் . இவ்வாறே பல இடங்களிலும் கூறுகின் ருர். 'இருநூற்று முப்பத்திரெண்டாம் பாடல், உரைப்பார் உரைப்பவை எல்லாம்' என்று குறிப்பிடுகிறது. இது உலகில் நடைமுறை வழக்கத்தினைக் காட்டுவதாகும். உலகில் நல் லோர் சொல்லுவர்-என்பதனையே இருநூற்று முப்பத் தெட்டாம் குறட்பா எடுத்துரைக்கின்றது. பிற இடங் களையும் காண்க : பல்லாற்ருல் தேரினும்’ என்று, இரு நூற்று நாற்பத்திரெண்டாம்' குறட்பா கூறுவது-ஆசிரியர் பரந்த பற்பல நூல்களின் உண்மையினையும் நன்கு உணர்ந்து முடிவு செய்வதனைப் புலப்படுத்துகிறது. இவ்வுலக மக்களே சான்று என்பதாக இருநூற்றுநாற்பத்தைந்தாம் குறட்பா கூறுகிறது. உலகில் உயர்த்தோர் சொல்லுவர்” என்ற