பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 முறையில், இருநூற்று நாற்பத்தாரும் குறட்பாவும் குறிக் கின்றது. யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை’ என்று ஆசிரியர் பற்பல முறைகளில் கண்டுணர்ந்த குறிப்பினையே சுட்டிக் காட்டுகிருர். இதனை, முன்னுாருவது பாடல் குறிக் கின்றது. 'முன்னுாற்று இருபத்திரெண்டாம் குறட்பா, மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும், ஆசிரியர் பற்பல நூல்களையும் ஆழ்ந்து அறிந்த பிறகே சீரிய உண்மையினை விளக்குகின்ருர் என்று மெய்ப்பிக்கின்றது. நன்கு அறிந்த வர்கள் கூறுவர் என்று, 'முன்னுாற்று முப்பதாம் குறட்பா அறிவிக்கின்றது. நூலோர் சொல்லுவர்' என்று ஆசிரியர் கூறும் முறையினையே முன்னுாற்று அறுபத்தோராம்” பாட லும் குறிக்கின்றது. என்று உலகோர் சொல்லுவர்’-இவ் வாறு ஆசிரியர் குறிப்பிடும் முறையினை முன்னுாற்றுத் தொண்ணுற்றிரெண்டாம் பாடலும் குறிக்கின்றது. "உலகு இன்புறக் கண்டு என்று குறிப்பிடுகின்ற முன் னுாற்றுத் தொண்ணுாற்று ஒன்பதாம் பாடல் சிந்திக்கத் தக்கதேயாகும். உலகம், உலகில் மேலோர்-உயர்ந்தோர் -அறிஞர்கள்-என்று அடிக்கடி ஆசிரியர் கூறுகின்ற முறை இவ்வுலகில் நல்ல தொண்டாற்றி வாழ்வதனை மிகவும் தெளிவுபடுத்துவதாகும். நானுாற்று இருபத்தைந்தாம்’ பாடல், உலகம் தழிஇயது ஒட்பம்’ என்று கூறுவதும், அதறகு அடுத்த பாடல் எவ்வது உறைவது உலகம்’ என்று கூறுவதும், உலகில் நடந்து கொள்ள வேண்டிய முறையில் நல்வழியில் நடந்து கொள்ளுவதனையே அறிவுடைமைக்கு அழகு என்று குறிப்பனவாகும். கற்பதற்கு அருமையான பல நூல்களைக் கற்று குற்றங்கள் இல்லாதவர்களாக இருப்பவர்களிடத்திலும், நுண்ணியதாக ஆராய்ந்து பார்த்தால், அறியாமை இல்லா திருப்பது அரிதேயாகும்’ என்று ஐந்நூற்று மூன்ரும்’ பாடல் கூறுகிறது. உலக இயல்பின முதன்மையாக வைத்து ஆசிரியர் நன்கு தெளிவுபடுத்துகிருர், "உலகில் எவ்வகைப்