பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்ட நூலோர்களாக இருந்தாலும், அத்தனைபேருக்கும் ஒப்ப முடிந்த கருத்து இதுவேயாகும்’ என்று ஐந்நூற்று முப்பத்து மூன்ரும் பாடல் உரைக்கின்றது. இவ்வாறு கூறுகின்ற முறை, ஆசிரியரின் தனிச் சிறப்பினைக் காட்டுவ தாகும். நீதி நூலுடைய முன்னேர் கூறியதைப் பின்பற் றுக’, என்று ஐந்நூற்று முப்பத்திரெண்டாம்” பாடல், குறிக்கின்றது. ஐந்நூற்று எழுபத்திரெண்டாம்” பாடல், "உலகியல் என்று சொல்லுகிறது. இவ்வாறே பிற இடங் களிலும் காணப்படுவதாகும். 'உலகத்து இயற்கை என்று அறுநூற்று முப்பத்தே ழாம் பாடல் எடுத்துக்காட்டி, உலகில் உயர்ந்தோர் பலரை யும் தழுவியே வாழ்தல் - நடந்து கொள்ளுதல் வேண்டும் என்பதனைக் கூறுகின்றது. அறுநூற்று அறுபத்து இரண் டாம் பாடல்’, ஆய்ந்தவர் கோள்’ என்று குறிக்கின்றது. பற்பல பேராசிரியர்களின் கருத்துக்களையும் தாம் உணர்ந்து கூறும் பான் ைம யி னே இது வெளிப்படுத்துவதாகும். நூலோர் சொல்லுவர்” என்று கூறி உணர்த்துகின்ற ஆசிரியரின் முறையினே எழுநூற்று முப்பத்தெட்டாம் பாடலும் குறிக்கின்றது. உலகத்தார் உண்டு என்பது’ என்று தொடங்கப்பெறும் எண்ணுற்று ஐம்பதாம் பாடல் குறிப்பிடத்தக்கதேயாகும். என்ப' என்று தொள்ளாயி ரத்துப் பதினெட்டாம்” பாடலும் குறிக்கின்றது. ஆராய்ந்த அறிஞர் கூறுவதாகும் என்பதையும் புலப்படுத்துகிறது. "நூலோர்’ என்று தொள்ளாயிரத்து நாற்பத்தோராம்' பாடல் கூறுகிறது. ஆசிரியர், நூலோர் பலருடைய கருத் துக்களைத் தழுவியும் எழுதுகிருர் என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டாகும். "தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்ரும் குறட்பாவும், எண்பத்தோராம் குறட்பாவும் என்ப' என்று குறித்துக் காட்டி ஆசிரியரின் அமைப்பு முறையினே மேலும் உரைக் கின்றன. அவ்வாறே, தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்று ஒன்ரும் குறட்பாவும் குறிக்கின்றது. இதற்கு அடுத்த