பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குறட்பா, வழக்கு’ என்று சொல்வி, உலகத்தார் கூறுவர் என்று காட்டுகிறது. 'ஆயிரத்து இருநூற்று எண்பதாம்’ குறட்பாவில், உடைத்து என்ப' என்று சொல்லி, ஆசிரியர் உலகியல் அறிஞர்களுக்கு ஒப்ப முடிந்ததையும் தழுவியே கூறுவதை எடுத்துக் காட்டுகின்ருர். ஆசிரியர் தி ரு வ ள் ளு வ ன ர் தமது நுண்ணறிவு கொண்டும், முன்னேர் மொழித்த பொன்னுரைகளைத் தழு வியும், உலக நடைமுறையில் உயர்ந்தோர், அறிஞர் கூதுப வைகளை மனதிற்கொண்டும் தமது நூலினே யாத்துள்ளார் என்ற பேருண்மை மேலே காட்டப்பட்ட சில எடுத்துக் காட்டுகளால் விளங்குவதாகும். நூலாசிரியர்கள் எழுதும் இயல்பு என்று மட்டும் கொள்ளுதல் சிறப்புடைத்தன்று : பிறவற்றையும் அவ்வாறே நூலினக் கற்றுணர்ந்து அறிதல் வேண்டும் காமத்துப்பால் திருக்குறளில் கூறப்பட்டுள்ள மூன்று பெரும்பகுதிகளுள் மூன்ருவதாகக் கூறப்படுவது காமத்துப்பாலாகும். முத விரண்டும் அறத்துப்பால், பொருட்பால் என்பனவாகும். இப்பிறவியில் நுகரப்படுவது காம இன்டமாகும். ஒரு காலத் தில் ஒரு பொருளால் ஐம்புலனும் நுகர்கின்ற காம இன்பத் தினக் கூறுவது எனப்படுவதாகும். இது, புணர்ச்சி, பிரிவு என இரு வகைப்படும். பிரிவு” என்னும் பகுதியில், இருத்தல், இரங்கல், ஊடல் என்பவை கள் அடங்கும். காமத்துப்பால், களவியல்,-கற்பியல்’ என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாகும். காமத்துப்பால், இருபத்து ஐந்து அதிகாரங்களைக் கொண்டுள்ளது. முதல் ஏழு அதிகாரங்களும் களவியலில் அடங்கியுள்ளன. மற்றைய பதினெட்டு அதிகாரங்களும் கற்பியலில் அடங்குவனவாகும். களவியல் என்பது புணர்ச்சி யினையும், கற்பியல் என்பது, அதாவது பிரிவு என்று கூறப்