பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 : 10, காதலியின் அடிகள்-பாதங்கள்-எப்படிப்பட்டவை? நெருஞ்சிப் பழத்தினை ஏன் குறிப்பிடுகின்ருன்? அன்னத்தின் தூவியும் அனிச்ச மலரும், அவனுடைய காதலியின் அடிக ளுக்கு எப்படிப்பட்ட வருத்தத்தினைக் கொடுக்கும்? (1120) 113. காதற் சிறப்பு உரைத்தல் இன்பம் நுகர்ந்த காதலனும், காதலியும் தங்கள் தங்கள் காதல் மிகுதியினைக் கூறுவதாகும். இன்பம் நுகர்ந்தபின் நிகழ்வதாகும். 1. பாலும் தேனும் கலந்தால் எப்படிப்பட்ட சுவை யுள்ளதாக இருக்கும்? இதனை அக்காதலன் எதற்கு ஒப்பிடு கின்ருன்? ஊறிய நீர் எதனைக் குறிக்கின்றது? வால் எயிறு என்று குறிப்பிட்டது யாது? [11 21յ 2. மடந்தை என்று குறிக்கப்பட்டது யார்? காதலன்காதலி தொடர்பு எப்படிப்பட்டதாக இருக்கிறது? என்ன, அன்ன என்பவைகள் குறித்தவை என்ன? [1122] 3. காதலன், இடமில்லை என்று கூறுகின்ருன்யாருக்கு? ஏன்? நீ என்று யாரைக் கூறினன்? பாவைகள் இருக்குமிடம் எது? ஏன் போகும்படி கூறிஞன்? [I 123յ 4. நீங்கும்போது காதலனுக்கு எப்படி இருக்கின்றது? இன்பம் நுகரும்போது எப்படி இருப்பதாகக் கூறுகின்ருன்? வாழ்தல்-சாதல்' என்று எதைக் குறிக்கின்ருன்? (1124) 5. மறப்பு அறியேன் என்று கூறுபவன் யார்? காதலியை எவ்வாறு சிறப்பித்துப் பேசுகின்ருன்? மறந் தறியேன் என்று கூறியது ஏன்? நினைத்தலும் அறியேன்” என்று அவன் கூறுவது எதற்கு? [11251 6. தனது காதலரை அவள் எவ்வாறு குறிப்பிடுகின் ருள்? அவ்வாறு குறிப்பிடக் காரணம் யாது? காதலரை அவள் எங்கே வைத்துக் கொண்டிருக்கின்ருள்? I 1126]