பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 7. காமநோய் எவ்வாறு வளர்கின்றது? தாய் கண்டித் துப் பேசுவதின் பயன் யாது? நீராகவும் எருவாகவும் இருப்பவை யாவை? பயிராகக் கூறப்படுவது எது? (11471 8. நெய் ஏன் குறிக்கப்பட்டது; நெருப்பினே எதல்ை அணைக்கமுடியாது? அலர் துாற்றுவதால் காமத்தினை அழித்து விட முடியுமா? எதற்கு எது சமம்? [I. 148] 9. ஊரார் துாற்றிப் பேசுவதற்கு தான் நாணமடை தல் கூடாது என்பதற்குக் காதலி கூறும் காரணம் யாது? கூடியபோது காதலன் கொடுத்த வாக்குறுதி யாது? இப் போது காதலன் என்ன செய்து விட்டான்? அவள் குறிப் பிடுவது எது? [11491 10. ஊரார் கவ்வை எடுப்பது நன்மைக்கே என்று அவள் ஏன் குறிப்பிடுகின்ருள்? யாம் விரும்புவது அதுவே என்று கூறுவது எதனைக் கருதி? தான் விரும்புவது போன்று காதலர் நடப்பார் என்று கூறுவதின் கருத்தென்ன? (1150) கற்பு இயல் :- திருமணம் செய்துகொண்டு நாயக னும் நாயகியுமாக வாழ்க்கை நடத்துவதைக் கூறுவதாகும். பொருள் தேடும் பொருட்டும் பிற காரணங்களிலுைம் நாயகன் நாயகியை விட்டுப் பிரிந்து செல்லுகின்றன். பிறகு திரும்பி வருகின்ருன். பிரிந்திருக்கும்போது நிகழ்கின்ற திகழ்ச்சியினையும்-காதலர் நிலைமையினையும்-பின்னர் வந்த போது நிகழ்வனவற்றையும் கூறுவது கற்பியலாகும். இப்பகுதி, பிரிவுணர்த்திய தலைமகனுக்குத் தோழி கூறு வதும், அவளுக்குத் தலைமகள், தானே அவன் குறிப்பால் உணர்ந்து கூறுதலும், பிரிவு உணர்த்தியபோது கூறுதலும், தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறுதலும் என, "நான்கு” வகைகளாகக் கூறப்படும். இப்பகுதி-கற்பியல், -பதி னெட்டு அதிகாரங்களைக் கொண்டதாகும்.