பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 9 6. காம இன் பத்தின் அளவு எவ்வாறு கூறப்படுகிறது? நாயகன் பிரிவால் வரும் காம வேதனையின் அளவு எப்படி இருக்கின்றது? இன்பம்-துன்பம்’-என்று குறிக்கப்படும் காலம் எது? լ1166] 7. எந்தக் கரையினை அவளால் காணமுடியவில்லை? காமத்தினை எப்படி அவள் குறிக்கின்ருள்? அவள் நீந்திவிட முயற்சிப்பது எது? தள்ளிரவிலும் எப்படி இருப்பதாகக் கூறுகின்ருள்? [11671 8. இரவுப் பொழுதுக்குத் துணையாக இருப்பது யார்? மற்றவர்கள் எல்லாம் ஏன் துணையாக இல்லை? எல்லோ ரையும் துயில் என்ன செய்தது? [1168յ 9. நாயகரை எவ்வாறு குறிக்கின்ருள்? நாயகர் கொடுமையினேவிட இரவுப் பொழுதினை ஏன் கொடியது என்று கூறுகின்ருள்? இப்போது, இரவுப் பொழுது எவ்வாறு கழிகின்றது? [1169] 10. அவளுடைய மனம் எங்கு செல்ல நினைக்கின்றது? அவ்வாறு செல்லுவதால் உண்டாகும் நன்மை யாது? கண்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? [1170յ 118. கண் விதப்பு அழிதல் நாயகனைக் காணாமல் கண்கள் துன்புற்று நாயக 2னக் காண விரைகின்றன என்பதாம். 1. கண்களைப் பார்த்து நாயகி என்ன கூறுகின்ருள்? கண்கள் துன்பப்படுவது ஏனே என்று அவள் குறிப்பது எதனைக் கருதி? இந்தக் காமநோய் அவளுக்கு எவ்வாறு உண்டாயிற்று என்று கூறுகின்ருள்? [1171] 2. ஆராய்ந்தறியாமல் கண்கள் செய்த தவறு என்ன? இது நம்மால் நேர்ந்ததென்று உணர வேண்டியது யார்? கண்கள் துன்பப்படுவதில் அர்த்தமில்லை என்று நாயகி ஏன் கூறுகின்ருள்? [1172]