பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 0 3. தொடக்கத்தில் காதலரைக் கண்கள் எவ்வாறு நோக்கின. இப்போது அவைகள் என்ன செய்கின்றன? இது நகைப்புக்கு இடமானது என்று அவள் ஏன் குறிக்கின் ருள்? [1173] 4. கண்களின் நிலை எவ்வாறுள்ளது? அவளுக்கு இந் நோயினை உண்டாக்கக் காரணமாக இருந்தவை எவை? ஒழிவில்லாத நோய் எது? [1174] 5. கடலும் சிறிதாகும் வண்ணம் பெரிதான நோய் எது? அதனை உண்டாக்கிய கண்கள் இப்போது எவ்வாறு உள்ளன? [1175] 6. தனக்குக் காம நோயினைத் தேடிக் கொடுத்த கண் களைப் பற்றி அவள் யாது நினைக்கின்ருள்? அவைகள் துன்புறுவதை இனிது என்று ஏன் கூறுகின்ருள்? [1176] 7. காதலரை முதலில் கண்கள் கண்ட தன்மையினை எவ்வாறு விளக்குகின்ருள்? நீர் அறுக’ என்று ஏன் கூறு கின்ருள்? [1177] 8, மனத்தால் விரும்பாமல் சொல் மாத்திரத்தால் மட்டும் விரும்பியவர் யார்? அவர் இருப்பதால் பயன் யாது? கண்கள் அமைத்திருப்பவையல்ல" என்று ஏன் கூறு கிருள்? [1178] 9. நாயகர் வராதபொழுது கண்கள் என்ன செய் கின்றன? நாயகர் வந்த பிறகு என்ன செய்கின்றன? கண் களின் நிலையினே எவ்வாறு குறித்தாள்? [1179] 10. மனதில் அவளால் ஏன் மறைத்து வைக்க முடிய வில்லை? பறையடிப்பது போன்றவை எவை? ஊரார்க்கு எளிமையாக இருக்குமாறு செய்வது எது? [1180]