பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 4. தோள்கள் இழந்ததாகக் கூறப்படுவது யாது? துணை நீங்கியதால் என்ன நேர்ந்தது? சோர்ந்து விட்டவை எவை? வாடியவை எவை? பைந்தொடி எது? [1234] 5. தோள் என்ன உரைக்கின்றது? கொடியார் என்று ஏன் கூறுகின்ருள்? தொல்கவின்' என்று குறிக்கப்பட்டது எது? வளையல்கள் என்ன ஆயின? [1235] 6. நாயகி நொந்து கொள்வதற்குக் காரணம் என்ன? வளையல்கள் ஏன் கழலுகின்றன? அதனுல் பிறர் என்ன கூறுகின்றனர்? நாயகன்பால் அவள் கொண்டுள்ள அன்பு எவ்வாறு புலப்படுத்தப்படுகிறது? [1236յ 7. நெஞ்சிற்கு எவ்வாறு சிறப்புரை கூறுகின்ருள்? நாயகருக்குச் சொல்லவேண்டியது என்ன? தோள்கள் என்ன செய்கின்றன? எவ்வாறு கொடியவராளுர்? [1237] 8. இறுக முயங்கிய கைகளை என்ன செய்தான்? அதைக் கண்டு அவளுடைய துதல் என்ன செய்தது? பசப்பு நிறம் பெற்ற காரணம் யாது? [1238] 9. கண்களை எவ்வாறு குறிக்கின்ருள்? குளிர்ந்த காற்று எங்கே சென்றது? எப்போது சென்றது? கண்கள் பசப்படைந்த காரணம் யாது? [1239] 10. ஒளி பொருந்திய நெற்றி என்ன செய்தது? அதைக் கண்டு கண்கள் என்ன செய்தன? கண்கள் பசப்புத் துன்ப முற்றது ஏன்? இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் காரணம் யாது? [1240] 125. தெஞ்சொடு கிளத்தல் துன்பமுற்ற நாயகி, தனக்கு யாதொரு பற்றுக்கோடும் இல்லாமல் செய்வதறியாது தனது நெஞ்சுடனே பேசுத லாகும். - 1. ஒன்று சொல்லாயோ' என்று நெஞ்சினைப் பார்த்து அவன் ஏன் கேட்கின்ருள்? நோயினை எப்படிக் குறிக்கின் ருள்? எதற்கு மருந்து வேண்டுகின்ருள்? [1241]