பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 7. நாணம் என்பதே தெரியவில்லை என்று ஏன் சொல்லுகின்ருள்? எப்போது தெரியவில்லை என்று குறிப்பிடு கின்ருள்? காமத்தால் பேணியாரைப் பற்றி அவள் நினைப் பது யாது? [1257] 8. பன்மாயக் கள்வன்’ என்று அவள் குறிப்பிடக் காரணம் யாது? அவன் பேசும் மொழி எப்படி இருக் கின்றது? அவனுக்குப் படையாக இருப்பது எது? அப்படை என்ன செய்கின்றது? பெண்மைக்கு உயர் குணம் எது? [1258] 9. என்ன எண்ணத்துடனே சென்ருள்? என்ன நடந் தது? அவ்வாறு அவள் ஏன் செய்தாள்? நெஞ்சம் என்ன செய்தது? அதனால் அவள் செய்ய வேண்டியதானது யாது? [1259] 10. நிணம் (கொழுப்பு) தீயிலிடப்பட்டால் என்ன வாகும்? அத்தன்மைத்தான நெஞ்சம் யாருக்குண்டு? அப்படிப்பட்ட நெஞ்சம் இருப்பதால் என்ன செய்யமுடிய வில்லை? யாது செய்யலாம் என்று எண்ணினுள்? (1250) 127. அவர் வயின் விதம்பல் பிரிந்திருக்கும் நாயகனும் நாயகியும் வேட்கை மிகுதி யினால் ஒருவரையொருவர் காணுதற்கு விரைதல் பற்றி கூறுவதாகும். 1. கண்கள் ஒளி இழந்ததற்குக் காரணம் என்ன? அவை என்ன செய்தன? விரல் ஏன் தேய்ந்து போயிற்று? சுவரில் என்ன செய்தாள்? ஏன் அவ்வாறு செய்தாள்? [1261] 2. காதலரை மறக்க முடியாது என்று ஏன் கூறுகின் ருள்? இலங்கிழாய்' என்று யாரை அழைத்தாள்? தோள் மேல் என்ன நடக்கும் என்று குறிப்பிடுகின்ருள்? கழிவது எது? [1262]