பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 2. 3. எதனைத் துணையாக நினைத்து நாயகன் சென்ருன்? அவர் விரும்பிச்சென்றது எது? அவள் இதுவரை இதுத்து கொண்டிருப்பதற்கு யாது காரணம் கூறுகின்ருள்? (1263) 4. நெஞ்சம் என்ன செய்கின்றது? யாரை நினைத்து அவ்வாறு செய்கின்றது? ஏறும் என்று எதனை நினைத்துக் குறித்தாள்? பிரிந்தார் வரவு எத்தகைய நிலையினை உண்டாக்கி விடுகிறது: [1264] 5. பசப்பு எப்போது நீங்கும் என்று கூறுகின்ருள்? தோள் எப்படி இருக்கின்றது? கண்டபின்’ என்ன நடக்கும்? காண்க என்று எவைகளைப் பார்த்துக் கூறு கின்ருள்? [1265] 6. வருக என்று அவள் கூறுவதன் குறிப்பு யாது? பருகுவன்’ என்று எதனைக் குறிப்பிடுகின்ருள்? பைதல்’ நோய் எப்போது கெடும்? ஒரு நாள் என்பது எதனை வெளிப் படுத்துகிறது? [1266] 7. யாது செய்வேன் என்று ஏன் திகைத்துக் கூறு கின்ருள்? தன்னுடைய நாயகனை எவ்வாறு குறிக்கின்ருள்? புலப்பேன், புல்லுவேன். கலப்பேன் ’’, என்றெல்லாம் அவள் வியப்புறக் காரணம் என்ன? [1267] 8. வேந்தனைப் பற்றி நாயகன் என்ன நினைக்கின்ருன்? மனேக்குப் போய் என்ன செய்ய நினைக்கின் முன்? மாலையில் என்ன செய்ய வேண்டுமென்பது அவனுடைய விருப்பமாக இருக்கின்றது? [1268] 9. ஏங்குபவர் யார்? ஒரு நாளைய பிரிவு அவளுக்கு எப்படி இருக்கின்றது? காதலர் எங்கே சென்றவராகக் கூறுகின்ருள்? [1269] 10. பிரிவினுல் காதலியின் நிலைமை எவ்வாறு இருக்கும் என்று காதலன் நினைக்கின்ருன் உள்ளம் உடைந்துவிட் டிருக்கும் என்று ஏன் கருதுகின்ருன்? அந்த நினைப்பால் அவன் கூறுவன யாவை? [1270]