பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 128. குறிப்பு அறிவுறுத்தல் பிரிந்து போன நாயகன் திரும்பி வந்து விடுகின்றன். ஒருவரை ஒருவர் சந்தித்து ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவித்தலாகும். 1. அவள் என்ன செய்கின்ருள்? அவள் உள்ளத்தில் மறைத்து வைத்திருந்தாலும், வெளிப்படுத்தி விடுவது எது? ஒன்று உண்டு என்று குறிப்பது எதனைக் காட்டுகிறது? [1271] 2. அவளுடைய அழகினை எவ்வாறு கூறுகின்ருன்? தோள்கள் எவ்வாறு குறிக்கப்பட்டன? அவளிடத்தில் மிகுதி யாக நிறைந்திருந்தது எது? [1272] 3. மணிகளுக்குள்ளே காணப்படுவது எது? அப்பெண் னின் அழகினுள்ளே புலப்பட்டுத் தோன்றுவது யாது? ஒன்று உண்டு’ என்று குறிப்பது எதனைக் கருதி? [1273] 4. முகை மொக்குள் இருப்பது எது? அது எப்படி இருக்கிறது? அப்பெண் நகைக்கின்ற குறிப்பில் உணர்த்தப் பட்டது எது? ஒன்று உண்டு என்று கூறிய மறைபொருள் என்ன? • , . . . [1274] 5. காதலியை எவ்வாறு குறிக்கின்ருன்? அவள் மறைத்த குறிப்பு எப்படிப்பட்டது? மருந்து ஒன்றினை உடையதாக இருக்கின்றது என்று எதனேக் கண்டு கூறினன்? . . . . . . . . . . . . . . - [1275] 6. பிரிந்திருந்து வந்த நாயகன் நாயகி மகிழும் வண்ணம் எவ்வாறு நடந்து கொண்டான்? இது நாள்வரை பொறுத்திருந்த அவளுக்கு உண்டான சிந்தனை யாது? - [1276] 7. வளையல்கள் உணர்ந்து கொண்டது எது? அவைகள் எப்போது உணர்ந்து கொண்டன? வளையல்கள் உணர்ந்து கொண்டன என்று எதிளுல் கூறுகின்ருள்? [1277] தி-3 - ... 3