பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 8. காதலர் எப்போது பிரிந்து சென்றதாகக் கருது கிருள்? மேனிப் பசந்தது எப்போது? நாயகன் பிரிந்து செல்லுவான்' என்ற குறிப்பு எவ்வாறு உணர்த்தப்பட்டது? [1278] 9. அவள் செய்த மூன்று செயல்கள் யாவை? தொடியை நோக்கியது. ஏன்? மென் தோள்களைப் பார்த்தது ஏன்? கடைசியாகத் தனது அடிகளை நோக்கியது எதனைக் கருதி? [1279] 10. கண்கள் சொல்லுவது யாது? அவள் இரந்து நிற்பது எதற்கு? காம நோயினச் சொல்லியவை யாவை? இயல்பாகிய பெண்மைக்குணம் மேலும் ஒரு பெண் தன்மை யினைப் பெற்றதென்று கூறப்பட்டதன் கருத்து 129. புணர்ச்சி விதம்பல் நாயகனும் தாயகியும் உள்ளத்தில் உண்டான வேட்கை மிகுதியிஞல் இன்பம் துகர்தற்கு விரைதல் பற்றிக் கூறுவ தாகும். 1. கள்ளிற்கு இல்லாத குணம் என்ன? காமத்திற்கு இருக்கும் குணம் என்ன? நினைத்தபோது என்ன உண் டாகும்? கண்டபோது என்ன உண்டாகும்? [1281] 2. எப்போது ஊடாதிருத்தல் வேண்டும்? தி ையளவும் என்ன செய்யாதிருத்தல் வேண்டும்? நிறையவரின் என்பது எதைக் குறிக்கின்றது? . [1282) 3. கொண்கன் செய்வது என்ன? கண்கள் என்ன செய்கின்றன? நாயகன் எப்போது அவ்வாறு செய்தான்? [1283] 4. நாயகி தோழி இடத்தில் என்ன சொன்னுள்? தாயகனிடத்தில் என்ன நினைத்துக் கொண்டு சென்ருள்? என்ன நடந்து விட்டது? நெஞ்சு என்ன செய்தது? அவள் மறந்தது என்ன? [I284]