பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 5. மை தீட்டும்பொழுது காண முடியாதது எது? எதல்ை காணமுடியவில்லை? கொண்கன் பழியினே அவளால் எப்போது காண முடியவில்லை? [1285] 6. கணவனைக் கானும்போது எதனைக் காண முடிய வில்லை? கணவனைக் காணுதபோது எதனைக் காணுதிருக்க முடியவில்லை? அவ்வாறு ஏன் சொல்லுகின்ருள்? (12861 7. இழுத்துக் கொண்டு போவது எது? புனலைப் போன்று செயல்படுவது யாது? புலந்திருந்தால் பய லுண்டா? ஏன் இல்லை? புலந்து நிற்க ஏன் நினைத்தாள்? [1287] 8. கள்வ’ என்று யாரைக் குறிக்கின்ருள்? துன்பம் செய்கின்றது எது? நாயகன் மார்பினை எதற்குச் சமமாக நாயகி ஒப்பிட்டுக் கூறுகின்ருள்? [1288] 9. மலரினைவிட மென்மைத் தன்மை வாய்ந்தது எது? அத்தன்மையறிந்து நடந்து கொள்ளுபவர்களே என்ன வென்று குறிப்பிட்டார்? X- [1289) 10. முன்பு ஒரு நாள் நாயகி எவ்வாறு நடந்து கொண் டாள்? ஊடலினை எவ்வாறு காட்டினுள்? புல்லுதலில் எவ்வாறு இருந்தாள்? அதற்குக் காரணம் என்ன? (1290) 130. நெஞ்சொடு புலத்தல் சிறு பிணக்கு எனப்படும் ஊடலினைச் செய்யக் கருதாத நெஞ்சுடனே தலைமகள் புலத்தலும் தலைமகன் புலத்தலுமாகும். 1. நாயகன் நெஞ்சு எப்படி நடந்து கொள்ளுகிறது? நாயகியின் நெஞ்சு எப்படி இருக்கின்றது? நாயகி தனது நெஞ்சினைப் பார்த்து என்ன கேட்கின்ருள்? . [1291] 2. தனது காதலரை என்னவென்று குறிக்கின்ருள்? நெஞ்சு அவரை அறிந்து கொண்டதோ? அவர் என்ன செய்ய மாட்டார் என்று நெஞ்சு நினைக்கின்றது? நெஞ்சம் எங்கு செல்ல நினைக்கின்றது? - - - - - - - [1292]