பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 132. புலவி துணுக்கம் நாயகனும் நாயகியும் ஓர் அமளிக்கண் இருந்தபோது நாயகனிடம் ஊடுதற்குக் காரணம் இல்லாவிட்டாலும், நுண்ணிய காரணத்தைக் காட்டி அவள் புலத்தல் என்ப தாகும். 1. பெண் தன்மையுள்ளவர்கள் எல்லாம் என்ன செய் வார்கள்? 'பரத்த' என்று ஏன் கூறுகின்ருள்? "பொது உண்பர் என்று கூறியதால் குறிக்கப்பட்டது யாது? [131 1] 2. ஊடிக் கொண்டிருக்கும்போது நாயகர் என்ன செய்தார்; காதலி என்ன செய்வாள் என்று நினைத்தான்? தும்மலைக் கண்டு அவள் தெரிவித்த கருத்து யாது? (13121 3. அவள் கோபித்துக் கொண்டாளா? ஏன் அவ்வாறு செய்தாள்? காட்டிய குடினிர் என்று சொன்னது யார்? அவ்வாறு சொன்னதின் கருத்து யாது? [1313] 4. நாயகியைப் பார்த்து நாயகன் என்ன சொன்னன்? அதற்கு அவள் என்ன பதில் சொன்னுள்? ஏன் ஊடிக் கொண்டாள்? யாரினும், யாரினும் என்றதன் குறிப்பு யாது? [1314] 5. கண் நிறைய நீர் கொண்ட காரணம் யாது? இப் பிறப்பில் எப்படி இருப்போம் என்று கூறினன்? பிரியமாட் டோம் என்று கூறியதற்கு ஏன் அழுதாள்? I 1315] 6. அவன் கூறியது யாது? நினைத்தேன் என்று கூறிய நாயகனுடன் ஏன் பிணங்கிக்கொண்டாள்? புல்லாதிருப்பது அவள் கூறிய காரணம் யாது? Г13161 7. அவன் தும்மியவுடனே அவள் என்ன செய்தாள்? பிறகு ஏன் அழுதாள்? அதற்கு என்ன காரணம் சொன்ள்ை? அவன் வேறு யாரையாவது நினைத்தான? լ1317յ