பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கூற்றுவன் (எமன்) என்று உலகோர் சொல்லுவதை முன்பெல்லாம் கேட்டறிந்தேனே யல்லாமல் நேரில் கண்ட றிந்ததில்லை. இப்போது கூற்றுவனேக் கண்டு கொண்டேன். பெண் தன்மையோடு கூடி பெரியவைகளாகப் போர் செய் கின்ற கண்களே அந்தக் கூற்றுவன் என அறிந்தேன். 4. (இக்குறட்பாவும் முந்தியது போன்றதாகும்.) கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண்தகை பேதைக்கு அமர்த்தன கண். (1084) பெண்மைக் குணங்களுடைய இப்பேதைக்கு (பெண் ஆக்கு) இருக்கின்ற கண்கள் தம்மைக் கண்டவர்களுடைய உயிரை உண்ணும் தோற்றத்துடனே மாறுபட்டிருந்தன. கண்களுக்குப் பெண்மைக் குணமும் இருக்கின்றதுகூற்றுவன் குணமும் இருக்கின்றது! 5. (இதுவும் அது: கூற்றமோ கண்ணுே பினையோ மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து. f 10851 இப்பெண்ணின் பார்வை என்னை வருத்தலால் கூற் றமோ? என்னைப் பார்ப்பதனலே கண்கள்தானே? இயல் பாக அஞ்சும் தோற்றம் தென்படுதலாலே மானே? யாதென்று அறிய முடியாதவளுனேன். இம்மாதின் கண்க ளுடைய பார்வையானது. இந்த மூன்று வகையான தன்மை களையும் உடையதாக இருக்கின்றது. 6. இதுவும் அது! கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல மன் இவள் கண். - [1086յ கொடுமையான புருவங்கள், தாம் வளையாமலிருந்து செம்மையாக அமைந்து கண்களை மறைத்தால், இவளுடைய இக்கண்கள் நடுங்குதற்குக் காரணமான துன்பத்தினை எனக்குச் செய்யாமலிருக்கும். நண்பனய கண்களுக்குப் புத்தி சொல்லாத புருவங்கள் என்று கூறப்பட்டது.