பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 7. (அவளுடைய முலைகளினலாய வருத்தம் கூறப்பட்டது) கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் படாஅ முலைமேல் துகில், լ1087յ இப்பெண்ணினுடைய சாய்தலில்லாத முலைகளின் மீது அணியப்பட்டுள்ள ஆடையானது, கொல்லுவதாகிய மதங் கொண்ட யானையின் முகத்தின் மீது போடப்பட்டிருக்கும் துணியினை ஒத்திருக்கின்றது. கண்ணே மறைத்தலால் கட் படாம்’ என்ருன். 8. (நுதலினல் (நெற்றியினல்) உண்டான வருத்தம் கூறப் பட்டது.) ஒண்துதற்கு ஒஓ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணுரும் உட்கும்என் பீடு. [10881 போர்க்களத்தில் எதிரில் வந்து நின்று எதிர்க்கமுடியாத பகைவர்களும், எதிர்த்தோடிய பகைவர்கள் சொல்லியதைக் கேட்டு அஞ்சுவதற்குக் காரணமான என்னுடைய வலிமை யெல்லாம், இம்மாதின் ஒளி வீசும் நெற்றியின் அழகு ஒன் றுக்கே உடைந்து அழிந்து விட்டதே. 9. (அப்பெண் அணிந்திருந்த ஆபரணங்களால் உண்டான வருத்தம் கூறப்பட்டது.) பிணைஏர் மடநோக்கும் நானும் உடையாட்கு அணி எவனே எதில தந்து. [1089յ வெளித் தோற்றத்திற்குப் பெண் மான் போன்று அச்ச முறுகின்ற பார்வையும், உள்ளத்திலே நாணத்தினையும் உடைய இப்பெண்ணுக்கு, அவைகளே அணிகலன்களாக இருக்க, வேறுபாடுடைய அணிகளே அணிந்திருக்கச் செய் தல் என்ன பயனை உடையதாகும்? 10. (அப்பெண்ணின் குறிப்பினை அறிந்து கொண்ட அவன் சொன்னது.) -