பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 உண்டார்கண் அல்லது அடுநருக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று. [1090] காய்ச்சப்பட்ட மது தன்ன உண்டவர்களைத்தான் மகிழச்செய்யும். அப்படியல்லாமல் காமத்தினைப் போல தன்னக் கண்டவரிடத்தில், மகிழ்ச்சியினை உண்டாக்குதல் அந்த மதுவுக்கு இல்லை. 110. குறிப்பு அறிதல் 1. (காதலன் அப்பெண்ணினுடைய உள்ளக் கருத்தின் குறிப்பினை அவள் பார்வையினல் அறிந்துகொண்டது.1 இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து. I1091] இப்பெண்ணினுடைய மை திட்டப்பெற்ற கண்களில் இருக்கின்ற நோக்கானது, இரண்டு நோக்குகளாக உள்ளன வாகும். அவைகளில் ஒரு பார்வையானது எனக்கு இக்காம நோயினை உண்டாக்கும் பார்வையாயிற்று. மற்ருெரு பார்வையானது, அந்த நோய்க்கு (நோய் தீர) மருந்தாக அமைந்தது. - 2. (இதுவும் அது! கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தின் செம்பாகம் அன்று பெரிது. [ 10921 இப்பெண்ணினுடைய கண்கள் நான் பார்க்காமல் களவு செய்து பார்க்கின்ற சிறிய பார்வை, உடம்பு ஒன்று பட்ட புண்ர்ச்சியில் ஒத்த பாதியளவு என்று சொல்லுதற் கில்லை; அதனினும் மிகுந்த அளவினதாகும். 3. (நோக்கிலுைம் நாணத்திலுைம் அறிந்து கொள்ளப் பட்டது.) நோக்கினுள் நோக்கி இறைஞ்சிள்ை அஃது அவள் யாப்பினுள் அட்டிய நீர். - [1093]