பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 அந்தப் பெண் நான் அவளைப் பார்க்காதிருந்தபோது என்னை அன்போடு பார்த்தாள். பார்த்தபிறகு ஏதோ ஒன்றினே மனதில் நினைத்து நாணத்துடன் தலை குனிந்தாள். இப்படியான செயல்களுக்குக் காரணமான குறிப்பானது, எங்கள் இருவரிடத்திலேயும் உண்டாகியுள்ள காதலாகிய பயிர் வளர்வதற்கு வார்க்கப்பட்ட தண்ணிராயிற்று. 4. (அவளுடைய நாணத்திலுைம் மகிழ்ச்சியினுலும் அவன் அறிந்து கொண்டது.) யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் தான்நோக்கி மெல்ல நகும். [1094] அம்மாதினை நான் பார்க்கின்றபோது அவள் நாணத் தால் தலை குனிந்து பூமியைப் பார்க்கின்ருள். அதைப் புரிந்து கொண்டு நான் பார்க்காமல் இருக்கின்றபோது, அவள் என்னைப் பார்த்து தனக்குள்ளே மகிழ்கின்ருள், மெல்லநகுதல்’ என்பது, வெளிப்புறத்தில் தெரியாதபடி மகிழ்தல். 5. முந்திய குறட்பாவில் கூறப்பட்டது போன்றதாகும்.) குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும். [1095յ நேராகக் குறிப்பினைக் கொண்டு - நேர்முகமாகப் - பாராமை மாத்திரமே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கிக் கொண்டவள் போல என்னைப் பார்த்துத் தன்னுள்ளே மகிழ்ந்து கொண்டு நின்ருள். 6. ( இங்கு வரக் கூடாது’ என்று தோழி கூறியபோது, அவள் குறிப்பறிந்து காதலன் தன்னுள்ளே சொல்லிக் கொண்டது.) உருஅ தவர்போல் சொலினும் செரு.அர்சொல் البي ஒல்லை உணரப் படும். I1096]