பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வெளிப்பார்வைக்கு அந்நியர் போல கடுமையான வார்த்தைகளைச் சொன்னலும், மனத்தினுள்ளே பகைமை யில்லாதவர்களுடைய சொற்கள்-அவைகளால் நன்மையே உண்டாகும்-என்று அறிந்து கொள்ளப்படும். பின்னல் நன்மை பயக்கும் சொற்கள் என்பது உணர்த்தப்பட்ட தாகும். 7. (இதுவும் அது செரு.அச் சிறுசொல்லும் செற்ருர்போல் நோக்கும் உருஅர்போன்று உற்ருர் குறிப்பு. ը 10971 பின்னர் இன்பம் பயக்கப்போவதாகவும், முன்னே துன்பம் தருவது போன்றதான சொல்லும், உள்ளத்தி தினுள்ளே சிறிதளவும் பகைமையே யில்லாமல், வெளிக்கு மட்டும் பகைத்துக் கொண்டவர் போன்ற கோபமான பார்வையும், அந்தியர்கள் போல இருந்து பிறகு காதல்நண்பர்களானவர்கட்கு ஒரு குறிப்பான காரணம் பற்றி வருவனவாகும். 8. (காதலளுகிய தன்னை நோக்கி மகிழ்ந்த காதலியைக் கண்டு அக்காதலன் கூறியது.) அசையியற்கு உண்டுஆண்டுஓர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். [1098] என்னை, வாராதே என்று நீக்குகின்ற சொல்லுக்கு, தாங்க முடியாமல் இரக்கத்துடன் நான் நோக்கியபோது, அதனை அப்பெண் தெரிந்து கொண்டு, இரக்கமுற்றவளாகி மனதிற்குள்ளே சிரித்துக் கொண்டாள். அதனல் அசைந்த சாயலழகு நிறைந்த அப்பெண்ணிடத்தில் நன்மைக் குறிப்பு ஒன்று இருக்கின்றது. 9. (தோழி உண்மையறிந்து தன்னுள்ளே கூறியது.) ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலசர் கண்ணே உள. [1099յ