பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 காதலியைப் பெருமல் துன்பமடைந்து கொண்டிருந்த உயிரானது, இவளைப் பெற்றுத் தளிர்ந்து மகிழ்ந்தின்புறு மாறு தீண்டுதலினலே, இந்தப் பேதைப் பெண்ணுக்குத் தோள்களானவை அமிழ்தத்தினவே செய்யப்பட்டிருப்பன வாகும். 7. (இப்பெண்ணை, நீ திருமணம் செய்து கொண்டு இல்லத் தில் இல்லறம் செய்து பகுத்துண்ணும் பான்மையுடன் வாழ வேண்டும் என்ற தோழிக்கு அக்காதலன் கூறியது.1 தம்இல் இருந்து தமது பாத்து உண்டற்ருல் அம்மா அரிவை முயக்கு . [1107] அழகு நிறைந்து பொன்னிறமான இம்மாதுடைய புணர்ச்சியானது, தமக்குரிய இல்லத்திலிருந்து தம்முடைய உழைப்பினால்-முயற்சியினல் வந்த பொருளைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துத் தாமும் உண்டது போல இருக்கிறது என்ருன். 8. (ஒரு பொழுதும் விடாத முயக்கமே-தழுவுதலே இனி தாகலான் திருமணம் கூறிய தோழிக்குச் சொன்னது.1 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. [1108] ஒரு பொழுதும் நெகிழாமையில்ை, காற்று இடையே போக முடியாததான முயக்கு (தழுவுதல்) காதலர்கள் இருவர்க்கும் மிகுந்த இன்பம் பயப்பதாகும். 9. (இவ்வாறு மறைந்து நடத்தும் களவு வாழ்க்கை நீங்கி திருமணம் நல்லது என்பவளுக்குக் கூறியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். լ 11091 தி-4