பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5五 மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண் பலர்காணும் பூவொக்கும் என்று. [1112] நெஞ்சமே! இந்தப் பெண்ணின் கண்காை, பலராலும் காணப்படுகின்ற மலர்களை ஒத்திருக்கும் என்பதாக எண்ணி பலவகைப்பட்ட மலர்களைக் காணும்போதெல்லாம் மயக்க முற்று-மயங்கி-நிற்கின்ருயே! என்னே பேதைமை! காதலி யின் கண்கள் அவன் ஒருவளுல் மட்டும்தான் பார்க்கமுடியும் என்ருன். 3. (காதலன் காதலியின் அரிய இயல்புத் தன்மையினே க் கூறினன்.) முறிமேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம் வேல் உண்கண் வேய்த்தோ ளவட்கு. [[III3) மூங்கில் போலும் தோள்களையுடைய அப்பெண்ணின் உடம்பு நிறம் தளிர் நிறமாக இருக்கும்; பற்கள் முத்துக்க ளாக இருக்கும்: இயற்கை மணமானது நல்ல மணமாக இருக்கும்; மை தீட்டப்பெற்ற அவளுடைய கண்கள் வேல் களாக யிருக்கும். 4. (குவளே மலரும் அவளுடைய கண்களும்.) கானின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாண் இழை கண் ஒவ்வேம் என்று. [1114] குவளை மலர்கள் பார்க்கின்ற தன்மையான குணம் பெற்றிருந்தால், சிறப்புயர்வு கொண்ட அணிகலன்களை யுடைய இப்பெண்ணின், கண்களே ஒத்திருக்க மாட்டோம் என்று நினைத்து தலை குனிந்து பூமியைப் பார்த்துக்கொண் டிருப்பனவாகும். 5. (பகலில் அவளுடைய பூ அணி கண்டு அவன் கூறியது.1 அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு நல்ல படாஅ பறை. [1115]