பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 என்னுடைய காதலியாகிய இப்பெண் அனிச்சப்பூக்களை காம்புகளே எடுக்காமல் குடிக் கொண்டாள். ஆதலால், இவள் இடைக்கு நல்ல நேரத்தில் ஒலிக்கின்ற பறைகள் ஒலிக்காது. பாரம் தாங்க முடியாமல் இடுப்பு முரியும் : அதனுல் இறந்துவிடுவாள் என்பதாகும். 6. இரவில் மதியை (சந்திரன்)க் கண்டு அவன் கூறியது.) மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன். [1116] விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) தமது தலைவனகிய சந்திரனேயும், என்னுடைய காதலியின் முகத்தையும் (எது சந்திரன் எது முகம்) என்ற வேறுபாடு அறியாமல் தங்கள் இடத்தினின்றும் கலங்கித் திரிந்து கொண்டிருப்பனவாகும். 7. (இதுவும் அது.1 அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல மறு உண்டோ மாதர் முக்த்து. . [1117] அந்த விண்மீன்கள் வேறுபாடு தெரியாமல் திரிவது அறியாமையாகும். ஏனெனில், குறைந்து நிறைகின்ற குணம் இப்பெண்ணுக்கு இல்லையே! முன்பு குறைந்திருந்த இடம் பிறகு நிறைந்த, ஒளி விடுகின்ற சந்திரனிடத்தில் இருப்பதைப் போல, இப்பெண்ணின் முகத்தில் களங்க மானது இருக்கின்றதோ? 8. (இதுவும் சந்திரனேக் குறித்ததே யாகும்.) மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி. [1118] மதியே! நீ வாழ்வாயாக! மகளிரின் முகங்களைப் போல ஒளி வீசுகின்ற தன்மை-குணத்தினை நீ பெற்றிருப்பா யானுல், நீயும் என்னல் விரும்பப்படுவாய், என்பதாம். 9. (மதி பலர் காணத் தோன்றக் கூடாது!)