பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 மலர் அன்ன கண்ணுள் முகம் ஒத்தியாயின் பலர்காணத் தோன்றல் மதி. [1119) மதியே! மலர் போலும் கண்களையுடைய இப்பெண் னிைன் முகத்தினை ஒத்திருக்க வேண்டுமென்று எண்ணுவாயா ஞல், நான் மட்டும் பார்ப்பதற்குத் தோன்றுவாயாக; பலராலும் காணப்படுமாறு தோன்ருதே. 1 0. (காதலனும் காதலியுமாகச் சென்று விடுங்கள்-என்று உடன் போக்கு கூறிய தோழிக்குக் காதலியின் அருமை கூறியவாறு.) அனிச்சமும் அன்னத்தின் துரவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம். [1120) மென்மைக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்படுகின்ற அனிச்சப் பூவும், அன்னப் பறவையின் மிகமிக மென்மை யான இறகும் இம்மாதின் அடிகளுக்கு (பாதங்கட்கு) நெருஞ்சிப்பழம் போல கொடிய துன் பத்தினைக் கொடுக்கும். 113. காதற் சிறப்பு உரைத்தல் 1. (இயற்கைப் புணர்ச்சி இறுதிக்கண் காதலன் தன் நயப்பு உணர்த்தியது.) பாலொடு தேன்கலந் தற்றே பணி மொழி வால்எயிறு ஊறிய நீர். [1121] மென்மையான சொற்களையுடைய இப்பெண்ணினு டைய வெண்மையான பற்களில் ஊறிய நீர் பாலுடனே தேனேக் கலந்த கலவை போல் இருக்கின்றது. 2. (பிரிகின்ற அச்சம் கருதி கூறியது.) உடம்பொடு உயிரிடை என்னமற்று அன்ன டந்தையொடு எம்மிடை நட்பு. [1122]