பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இப்பெண்ணுடனே எமக்கு உண்டாகியுள்ள அன்பு உடம்புடன் உயிரிடத்து உள்ள நட்பு எப்படிப்பட்டதோ அப்படிப்பட்டதாகும். இருவரும் பிரிந்து தனித்திருந்து வாழ முடியாதவர்களாகும். 3. (இடந்தலைப் பாட்டின்கண்-அதாவது காதலியை விட்டு நீங்கியிருந்தபோது அவன் கூறியது.) கருமனியிற் பாவாய்நீ யோதாய்யாம் வீழும் திருதுதற்கு இல் ைஇடம். [1123] என் கண்ணின் கருமனியில் இருக்கின்ற பாவையே! அந்த இடத்தை விட்டுப் போவாயாக, போகாதிருந்தால், தான் விரும்பிக் காதலிக்கின்ற அழகிய நெற்றியினையுடைய காதலி வந்து இருக்க இடம் இல்லே (கருமணியின் பாவை போய்விட்டால் பார்வை இழப்போம் என்பதைக் காதலன் கருதவில்லே.) 4. (பகற்குறிக்கண் புணர்ந்து நீங்கும் காதலன் கூறியது.) வாழ்தல் உயிர்க்குஅன்னள் ஆயிழை சாதல் அதற்கு அன்னள். நீங்கு மிடத்து. I 11 24 J ஆராய்ந்து அணிந்துகொண்டிருக்கின்ற அணிகலன் களைக் கொண்ட இப்பெண்ணுனவள், அவள் புணர்ந் திருக்கும்போது உயிருக்கு உடம்புடன் கூடி வாழ்ந்துகொண் டிருப்பது போல இருக்கின்ருள். அவளை விட்டுப் பிரியும் போது அந்த உயிர்க்கு உடம்பிலிருந்து நீங்கிப் போவது போலாகின்ருள். 5. (யாதேனும் காரணம் குறித்துப் பிரிந்து போன காதலன் திரும்பி வந்தபோது, எம்மை மறந்திரோ' என்று கேட்ட தோழிக்குக் கூறிஞன்.) உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒன்னமர்க் கண்ணுள் குணம்