பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 நான், ஒளி நிறைந்தனவாயும் போர் செய்வனவாயும் உள்ள கண்களையுடைய காதலியினுடைய குணங்களை மறந் திருந்தால் நினைத்துப் பார்ப்பேன். ஒருபோதும் மறந்திருந்த தில்லை. ஆதலால் நினைத்தலும் அறியேன், என்ருன். 6. [பிரிந்திருக்கும் காதலனைப் பிரிந்திருப்பதால் தோழி பழித்துக் கூறுவாள் என்று கருதி, காதலி அவள் கேட்பத் தனக்குள்ளே கூறியது.1 கண்ணுள்ளில் போகார் இமைப்பின் பருவரார் நுண்ணியர்எம் காத லவர். [1126] எம்முடைய காதலர் கண்ணுள்ளிருந்து போகமாட் டார். அறியாமல் கண்களே நான் இமைத்து விட்டால் அதனல் வருத்தப்படவுமாட்டார். ஆதலால் வெளியில் காணப்படார். அவ்வாறு காணப்படாத நுண்ணியர், (காத லன் சிறப்பினைக் காதலி இவ்வாறு வெளிப்படுத்தினுள்.) איא 7. (காதலன் அருமையினை மீண்டும் கூறுகிருள்.) கண்ணுள்ளார் காதலவ ராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து. [1127] எம்மீது நிறைந்த ஆசையுள்ள காதலர் எம்முடைய கண்ணுள் எப்போதும் இருக்கின்ருரானபடியால், கண்களை மையினால் எழுத மாட்டோம். ஏனென்ருல் மையிடுகின்ற அந்த நேரம் வரை அவர் மறைந்திருக்க வேண்டியிருக்கும்; மையிடுதல் அவரை மறைக்கும் என்பதாம். 8. (நெஞ்சிலேயே என்றும் காதலர் உள்ளார்.) நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் அஞ்சுதும் வேபாக்கு அறிந்து. - - [1128] எம்முடைய காதலர் எப்போதும் நெஞ்சிலேயே இருந்து கொண்டிருக்கின்ருர் ஆனபடியால், உணவு உண்ணும் போது சூடு உள்ளதான உணவினே உண்ணுதற்கு அஞ்சு கின்ருேம். ஏனெனில் சூடுபட்டு அவர் துன்புறுவார் என்ப