பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 தற்காக-என்பதாம். அதாவது காதலர் அக்காதவியைப் பிரிந்திருப்பதே இல்லையாம். 9. கிருமணம் செய்துகொள்ள பொருளிட்ட வெளியூர் சென்றிருக்கும் காதலரை-அவளே விட்டுப் பிரிந்துவிட் டார் என்று குறை கூறுவோர்க்கு அவள் கூறியது.) இமைப்பின் காப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ் ஊர். என்னுடைய கண்கள் இமைத்தலைச் செய்யுமாயின் கண்ணுள் இருக்கும் காதலர் மறைந்து விடுவார். அதனல் நான் கண்ணிமைக்காமல் விழித்துக் கொண்டே இருக்கின் றேன். இந்த அளவுக்கே இவ்வூரார், என்னுடைய காதலர் அன்பில்லாதவரென்றும், எனக்குத் துரங்காத நோய் செய் தார் என்றும் கூறுகிரு.ர்கள், [1129] 10. (ஊரார் சொல்லுக்குப் பதில் கூறுகிருள்.) உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர் ஏதிலர் என்னும் இவ் ஊர். [1130] என்னுடைய காதலர் எப்போதும் என்னுடைய மன திற்குள் மகிழ்ந்து இருந்துகொண்டிருக்கின்ருர். அதைத் தெரிந்து கொள்ள முடியாத இந்த ஊர் மக்கள் என்னு டைய காதலர், பிரிந்திருக்கின்ருர், அன்பில்லாதவர் என்று கூறுகிருர்கள். 114. நானுத்துறவு உரைத்தல் 1. காதலன் காதலியைச் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. காதலிக்கும் அவ்வாறே யாகும். காதலன் கூறுகிருன்.) காமம் உழந்து வருந்தினர்க்கு ஏமம் கடல்அல்லது இல்லை வலி. [1131]