பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 இன்பம் நிறைந்த மகளிரோடு காமத்தினைச் சுவைத்து அனுபவித்து, பிறகு அந்த இன்பம் பெருமல் துன்பம் அடை கின்ற காதலர்கட்கு மடன்மா ஏறுதல் என்ற பாதுகாப் பான வழியை விட வேறு வலியது இல்லையாகும். (பனை ஒலையாலே செய்யப்பட்ட குதிரை மீது அமர்ந்து ஊரார் அறியச் செய்வதே-மடல்-என்று கூறினன்.) 2. (நாணம் உடைய துமக்கு அவ்வாறு செய்தல் தகாது என்ற தோழிக்குக் கூறியது.) நோ ைஉடம்பும் உயிரும் மடல்ஏறும் நாணி?ன நீக்கி நிறுத்து. [1132] மடன்மா ஏறுதல் நாணமுடையவர்க்கு ஆகாது. நாணத்தினை விலக்கி-நீக்கிவிட்டு, பிரிந்திருக்கும் வருத்தத் தினைத் தாங்கிக்கொள்ள முடியாத உடம்பும் உயிரும் அவை கட்குக் காப்பான மடன்மா ஏறுதலே நினைத்துக்கொண்டிருக் கின்றன. 3. நாணமே பன்றி நல்லாண்மை உடையவர்க்கு முடி யாது என்ருட்குக் கூறியது.) நாணுெடு நல்லாண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் காமுற்ருர் ஏறும் மடல். [1133] நாணத்தினையும் மிகுந்த ஆண்மைத் தன்மையினையும் முன்னே உடையவகை இருந்தேன். அவை காமத்தால் நீக்கப்பட்டு விட்டன. இப்போது மடலேறுதலை உடைய வகை இருக்கின்றேன். 4. (காம வெள்ளம் இழுத்துக்கொண்டு போயிற்று.) காமக் கடும்புனல் உய்க்குமே நாளுெடு நல்லாண்மை என்னும் புனை. [1134] காம வேதனையைக் கடந்து செல்ல-புனையாக-தெப்ப மாகக் கொண்டிருந்த நாணம்-நல்லாண்மை என்ற இரண்