பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 8. (காவல் மிகுதியாக்கப்பட்டு காமம் பெருகிய நிலையில் காதலி கூறியது.1 நிறை அரியர் மன் அளியர் என்னது காமம் மறைஇறந்து மன்று படும். [1138] இம்மாது நிறை குணச் சிறப்பினுல் நாம் மேற்கொள்ளு வதற்கு அருமையானவர் என்று அஞ்சாமலும் மிகவும் அன்பு காட்டப்பட வேண்டியவரென்று இரக்கங்கொள்ளாமலும் காமமானது, நான் மறைத்து வைத்திருப்பதையும் கடந்து பலரறியுமாறு அவையில் வெளிப்படுவதாகின்றது. (இவ் வாறு அக்காதலி கூறுகின்ருள்.) 9. காமம்-அவள் துன்பம் வீதிகளில் இருப்போர்க்கும் தெரியத் தொடங்கி விட்டது.1 அறிகிலார் எல்லாரும் என்றோன் காமம். மறுகின் மறுகும் மருண்டு. ք11391 எல்லோரும் என்னை அறிந்திலர்’ என்று காமம் தினத் துக்கொண்டு, இனி அடங்காமல் நானே வெளிப்பட்டு அறிவிப்பேன்’ என்று நினைத்து, என்னுடைய காமமானது இந்த ஊர் வீதிகளில் மயங்கி சுழன்று அம்பலாக்கிக் கொண்டிருக்கிறது. 10. (காதலி ஊராரின் செயலினைக் குறித்துச் சொன்னது.1 யாம்கண்ணிற் காண நகு.ப. அறிவில்லார் யாம்பட்ட தாம்படா வாறு. III.4.0] . யாம் கண்ணிற்கான-கண்ணுல் பார்க்கும்படியாக, அறிவில்லாதவர்கள் சிரிக்கின்ருர்கள். அவர்கள் அவ்வாறு செய்வதற்குக் காரணம் யாம் அடைந்த இந்தக் காம நோயினை அவர்கள் அனுபவித்திராததே யாகும்.