பக்கம்:திருக்குறள்-காமத்துப்பால்-பொழிப்புரை.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 4. (ஊரார் தூற்றிப் பேசுகின்ற கவ்வையால் காமம் மிகுவதாகின்றதாம்.) கவ்யைால் கவ்விது காமம் அது இன்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து. [1144] என்னுடைய காமம் இந்த ஊர் மக்கள் தூற்றிப் பேசுவ தால்-மேலும் மேலும் மிகுந்து வளர்வதாயிற்று. அப்படிப் பட்ட அலர் (துாற்றிப் பேசுதல்) இல்லையென்ருல் இன்பம் தருகின்ற நிலை இழந்து சுருங்கிப் போவதாகும். 5. (காமமும் கள்ளும் சேர்த்துக் கூறப்படுகிறது.) களித்தொறும் கள்ளு எண்டல் வேட்டற்ருல் காமம் வெளிப்படுந் தோறும் இனிது. [1145] உண்பவர்கட்கு உண்டு மகிழுந்தோறும் கள்ளுண்ணுதல் இனிமையாக இருக்கின்ற தன்மையினைப்போல, எனக்குக் காமமானது ஊரார் துாற்றிப் பேசுவதால் வெளிப்படும் போதெல்லாம் இனிமை தருவதாக இருக்கின்றது. 6. (காதல் ஊரெங்கும் பரவியதைக் குறித்து அக்காதலி கூறினுள்.) கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று. [1146] காதலரை நான் கண்டு மகிழ்ந்தது ஒரு நாளேயாகும். அதனால் இவ்வூரார் எடுக்கும் அலர் (துாற்றிப் பேசுதல்) அந்த அளவு இல்லாமல், சந்திரனேப் பாம்பு பிடித்துக் கொண்ட நிகழ்ச்சி போன்று உலகெங்கும் பரவி விட்டது. 7. (காம நோய் வளர்கின்ற காரணம்.) ஊரவர் கெளவை எருவாக அன்னை சொல் நீராக நீளும் இந் நோய். [1147]